ரயில்வேக்கு
பிரதமர் பாராட்டு
கே.எஸ்.ஆர் பெங்களூரு ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் மற்றும் பெட் பாட்டில்களைக் கொண்டு செய்யப்பட்ட சிற்பத்திற்காக ரயில்வேக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்
பெங்களூரு கே.எஸ்.ஆர்.ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் மற்றும் பெட் பாட்டில்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட சிற்பத்திற்காக தென்மேற்கு ரயில்வேயின் செயல்பாடுகளுக்கு பிரதமர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு ரயில்வேயின் ட்விட்டர் செய்தியை மேற்கோள் காட்டி, பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "இத்தகைய முயற்சிகள் புதுமையானவை மட்டுமின்றி பாராட்டுக்குரியவை என்றும், மிக முக்கியமாக சுற்றுப்புறங்களையும்,பொது இடங்களையும் சுத்தமாக வைத்திருப்பது குறித்த மக்களின் அடிப்படைக் கடமையை நினைவூட்டுவதாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours