ஊர்க்காவல் படைக்கு
உடல் தகுதி சான்றிதழ்
சரிபார்ப்பு
திருச்சி மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 35 ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் என 37 காலிப் பணியிடங்களுக்கு திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று உடல் தகுதி மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு தேர்வு நடைபெற்றது.
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஷீத்குமார் தலைமையில் நடைபெற்ற இத்தேர்வில் 17 பெண்கள் உட்பட சுமார் 310 விண்ணப்பதாரர்கள் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் இணை அதிகாரி ஊர் காவல் படை முகமது ரஃபி,
ஊர்க்காவல் படை வட்டாரத் தளபதி சிராஜுதீன், துணை வட்டார தளபதி முத்துமாலா தேவி, காவல் ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் பல அதிகாரிகள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours