தேசிய அஞ்சல் வார விழா
கண்காட்சியை பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்
தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு திருச்சி தலைமை அஞ்சல் அலுவலகம் சென்று இந்திய கலாச்சாரம் மற்றும் விடுதலை வரலாறு குறித்த தபால் மற்றும் அச்சிடப்பட்ட உறைகளின் சேகரிப்பு குறித்த கண்காட்சியை பார்வையிட்டனர்.
ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 9 ஆம் தேதி சர்வதேச தபால் தினமாகக் கொண்டாடப்படுகிறது.இதையொட்டி இந்தியாவில் ஆண்டுதோறும் அக்டோபர் 9ம் தேதி முதல் 14ம் தேதி வரை தேசிய அஞ்சல் வாரம் கொண்டாடப் படுகிறது.
இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டம் திருச்சி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இந்திய அஞ்சல் துறையின் சார்பில் தேசிய அஞ்சல் வார விழா இன்று முதல் அக்டோபார் 14ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இன்றுமுதல் பள்ளி மாணவர்கள் தபால் அலுவலகத்தை பார்வையிட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
இதன் காரணமாக இன்று தென்னூர் சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளி மாணவர்கள் திருச்சி தலைமை அஞ்சல் அலுவலகம் சென்று பார்வையிட்டனர்.அஞ்சலக உதவியாளர் பிரபு மற்றும் அஞ்சல் தொடர்பு அதிகாரி ஜம்புநாதன் ஆகியோர் மாணவர்களை வரவேற்றனர்.
திருச்சி தலைமையிட அஞ்சலக அஞ்சல் அதிகாரிகள் மாணவர்களிடம் பேசியபோது ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 9ஆம் தேதி சர்வதேச அஞ்சல் தினமாக கொண்டாடப்படுகிறது இதையொட்டி இந்தியாவில் ஆண்டுதோறும் அக்டோபர் 9 முதல் 14 ஆம் தேதி வரை தேசிய தபால் வாரம் அனுசரிக்கப்படுகிறது.
நமது திருச்சி மாவட்டத்தில் இன்று முதல் அக்டோபார் 14ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.1874 ஆம் ஆண்டு சர்வதேச போஸ்டல் யூனியன் தொடங்கப்பட்ட தினமே தபால்தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது மாறிவரும் காலங்களுக்கு ஏற்ப தபால்துறை வளர்ச்சியடைந்து வருகிறது.
இன்றைக்கு நாம் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றில் கருத்துகளையும் செய்திகளையும் பகிர்ந்து வந்தாலும் நூறு ஆண்டுகளுக்கு மேலாக மக்களை இணைத்து வரும் தபால் துறை இன்றும் பல்வேறு நிலைகளில் வளர்ச்சியடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.மேலும் TRICHY PHILATELIC BUREAU நடத்தும் தபால் மற்றும் அச்சிடப்பட்ட முத்திரைகளின் சேகரிப்பு பற்றி எடுத்துக்கூறி விளக்கினார்.
முதுநிலை அஞ்சல் சேகரிப்பாளர் ரகுபதி அஞ்சல் தலை சேகரிப்பின் அவசியத்தையும், அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். அஞ்சல்தலை சேகரிப்பில் ஈடுபடும்போது மற்ற எல்லாவித செல்போன் விளையாட்டுகளில் இருந்து மாணவர்கள் விலக இது ஏதுவாக இருக்கும் அதுவே பொழுது போக்குகளின் அரசன் என்று கூறினார்.
மேலும் தபால்தலை சேகரிப்பு குறித்த பயிலரங்கம் நடத்தப்பட்டது. மாணவர்கள் கண்காட்சியில் இடம்பெற்று இருந்த இந்திய அஞ்சல் வரலாறு இந்திய கலாச்சாரம் மற்றும் விடுதலை வரலாறு நீதிகதைகள் ஆகிய தபால்தலை புகைப் படங்களையும்,குழந்தைகள் தின சிறப்பு கடிதங்களையும் கண்டு மகிழ்ந்தனர்.
இந்தியா 2047 (VISION FOR INDIA 2047) என்ற தலைப்பில் தாய் அகார் கடிதம் எழுதும் போட்டி (DHAI AKHAR LETTER WRITING) குறித்து விளக்கப்பட்டது
அனைவருக்கும் அஞ்சல் அட்டை வழங்கப்பட்டு இன்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதிலை எழுதி அருகாமையில் உள்ள அஞ்சலகத்தில் சேர்க்குமாறு தெரிவிக்கப்பட்டது.
சுப்பையா நினைவு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜீவானந்தன் தலைமையில் ஆசிரியைகள் உமா, உஷாராணி இல்லம் தேடிக்கல்வி திட்ட தன்னார்வலர் குழந்தைவேல் உள்பட திரளான மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சியும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours