குண்டர் சட்டத்தில்

இருவர் கைது


கடந்த 16.09.22-ம்தேதி Frontline மருத்துவமனை அருகில் நடந்து சென்ற இன்ஜினியரை கத்தியால் கொலை முயற்சி செய்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பிரிஸ்டன் பத்ரி தெருவை சேர்ந்த எதிரி முகில் @ முகில்குமார் வயது 21, த.பெ.சிவக்குமார் என்பவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையில் எதிரி மீது கத்தியை காண்பித்து பணத்தை பறித்து சென்றதாக 7 வழக்கும், நான்கு சக்கர வாகனத்தை சேதப்படுத்திய வழக்குகள் உட்பட எதிரி மீது 15 வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்ததது.

கடந்த 24.09.22-ந்தேதி, ஏர்போர்ட், முல்லைநகர் சந்திப்பில், வெல்டிங்கடை உரிமையாளரிடம் கத்தியை காண்பித்து பணம் ரூ.500/- பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஏர்போர்ட் காமராஜ் நகரை சேர்ந்த எதிரி அபு @ இப்ராகிம்ஷா வயது 25, த.பெ.காஜாமொய்தீன் என்பவரை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையில் எதிரி மீது கத்தியை காண்பித்து பணத்தை பறித்து சென்றதாக 2 வழக்குகளும், கட்டையால் தாக்கி காயம் ஏற்படுத்தியதாக 2 வழக்கும், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக 3 வழக்குகள் உட்பட் 10 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.

எனவே, எதிரிகள் முகில்குமார் மற்றும் இப்ராகிம்ஷா ஆகியோர்கள் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், கத்தியை காட்டி பணம் பறிப்பது, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் என விசாரணையில் தெரியவருவதால், எதிரிகளின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு சம்பந்தபட்ட காவல் ஆய்வாளர்கள் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து,

திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன் 2 எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours