பள்ளி மாணவிக்கு பாலியல் மிரட்டல்

தலைமறைவான மாணவியின் தாய் உட்பட 5 பேர் மீது வழக்கு


திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் மிரட்டல். தலைமறைவான மாணவியின் தாய் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

திருச்சிமாவட்டம் மருங்காபுரி அருகே அழகாபுரி பகுதியை சேர்ந்த  13 வயது சிறுமி அப்பகுதி அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். 

சிறுமியின் தந்தை உயிரிழந்ததால் தாய் பழனியம்மாள் தனியாக வசித்து வரும் நிலையில், சிறுமி தனது தாத்தா முருகன் வீட்டில் தங்கி படித்து வருகிறார். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள கரும்பு காட்டு பகுதியில் சிறுமி ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது கரும்பு காட்டிற்கு சென்ற அதே பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் சின்னதம்பி(எ)சங்கிலி(45), புதுக்கோட்டை மாவட்டம். கவரப்பட்டியை சேர்ந்த அழகர் மகன் தினேஷ்(22),  அழகாபுரியை சேர்ந்த அழகு மகன் சரத்குமார் (24), தனபால் மகன் பாலசந்தர் (23) ஆகிய நான்கு பேரும் சிறுமியை செல்போனில் ஆபாச படம் எடுத்து பாலியல் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து தகவலறிந்த சிறுமியின் தாத்தா முருகன்  மணப்பாறை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதனையறிந்த சின்னதம்பி (எ) சங்கிலி, தினேஷ், சரத்குமார், பாலசந்தர் மற்றும் உடந்தையாக இருந்த சிறுமியின் தாய் பழனியம்மாள் ஆகியோர் தலைமறைவாகினர்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய அனைத்து மகளிர் போலீசார், தலைமறைவான 5 பேர் மீதும் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours