06/29/22

 

நடிகர் சூர்யா

ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராக சேர பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் அழைக்கப்படுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு கலை மற்றும் அறிவியல் பிரிவில் இந்தியா சார்பாக நடிகர் சூர்யா அழைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து ஆஸ்கர் விருது குழுவில் உறுப்பினராகவிருக்கும் முதல் தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை நடிகர் சூர்யா பெற்றுள்ளார். அவருடன் இந்தி நடிகை கஜோலுக்கும் அழைப்புவிடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய சார்பில் இயக்குநர் பிரிவில் பான் நலின் என்பவருக்கும் ஆவணப் படங்கள் பிரிவில், சுஷ்மித் கோஷ் மற்றும் ரின்டு தாமஸ் ஆகிய இருவருக்கும், எழுத்தாளர்கள் பிரிவில் ரீமா காக்டி என்பவருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஆஸ்கர் குழுவில் உறுப்பினராக அழைக்கப்பட்டதை தொடர்ந்து "பிரைட் ஆஃப் இந்தியன் சினிமா" (இந்திய சினிமாவின் பெருமிதம்) என்ற வார்த்தைகளுடன் சூர்யாவை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

இதனையடுத்து பிரைட் ஆஃப் இந்தியன் சினிமா என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி சூர்யா ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை பதிவு செய்துவருகின்றனர். சூர்யா தயாரித்து நடித்து கடந்த ஆண்டு வெளியான ஜெய்பீம் திரைப்படம் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

அரிசி ஆலை இயந்திரங்களுக்கான ஜி.எஸ்.டி வரி 5% ல் இருந்து 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.




47-வது GST கவுன்சில் கூட்டம் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சண்டீகரில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில நிதியமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேச பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.



இதையடுத்து இந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் LED விளக்குகள், பேனா மை, கத்தி, பிளேடுகளுக்கு 12%ல் இருந்து 18% ஆக ஜி.எஸ்.டி வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் மோட்டார் பம்புகள், பால் பண்ணை இயந்திரங்களுக்கான ஜி.எஸ்.டி வரி 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் அரிசி ஆலை இயந்திரங்களுக்கான ஜி.எஸ்.டி வரி 5%ல் இருந்து ஒரேடியாக 18%ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சூரிய சக்தி வாட்டர் ஹீட்டர், பதப்படுத்தப்பட்ட தோல்களுக்கான ஜி.எஸ்.டி வரி 12% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ரூ.1000-க்கும் குறைவான விடுதி அறை வாடகைக்கு 12% ஆக ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அஞ்சலக சேவைகளுக்கான வழங்கப்பட்டு வந்த ஜி.எஸ்.டி வரி விலக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அஞ்சல் சேவைகளுக்கான ஜி.எஸ்.டி வரி இனி வசூலிக்கப்பட உள்ளது.

விவசாய பயன்பாட்டிற்கான பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி உயர்த்தப்பட்டுள்ளது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஆன்லைன் விளையாட்டுகள் மீதான 28% GST வரி உயர்த்துவது தொடர்பான முடிவை ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரி உயர்வு ஜூலை மாதம் 18 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும், மதுரையில் அடுத்த GST கவுன்சில் கூட்டம் ஆகஸ்ட் முதல்வாரத்தில் நடைபெறும் எனவும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

 
x

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருப்பத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில், திருப்பத்தூர் நகரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் உள்ளிட்ட 129 கோடியே 56 இலட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற 28 திட்டப்பணிகளை திறந்து வைத்து, 13 கோடியே 66 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 6 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 16,820 பயனாளிகளுக்கு 103 கோடியே 42 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அடுத்துள்ள பூலாங்குளம் பகுதியில், சந்தேகத்திற்குரிய வகையில் ரத்த காயங்களுடன் கூடிய சாக்குமூட்டை கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சாக்குமூட்டையை பிரித்து பார்த்த போது அதில் பெண் சடலம் இருப்பதை கண்டனர்.

இதைத்தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போது, அந்த பெண் பூலாங்குளம் அருகே உள்ள கீழதிப்பம்பட்டியை சேர்ந்த பாண்டீஸ்வரி என்பது தெரியவந்தது. பின்னர் மேற்கொண்ட விசாரணையில், பாண்டீஸ்வரி தனது முதல் கணவரை பிரிந்து இரண்டாவதாக அமுல்ராஜ் என்பவரைத் திருமணம் செய்து அவருடன் வசித்து வந்துள்ளார்.

இதையடுத்து, இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமுல்ராஜ் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டாவது கணவன் சிறையில் இருக்கும்போது, தனியே வசித்து வந்த பாண்டீஸ்வரி, சில நாட்களுக்கு முன்பு சேடப்பட்டியை சேர்ந்த ஹவுஸ் பாண்டி என்பவரை சந்தித்துள்ளார். அவருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இவர்கள் இருவரும் காதல் வலையில் மட்டும் விழாமல், இவர்கள் சேர்ந்து திருட்டு, கஞ்சா உள்ளிட்ட குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு வந்ததோடு, அதில் கிடைக்கும் பணத்தை இருவரும் பங்கு போட்டு கொள்வர். அவ்வாறு பங்கு போட்டுக்கொள்ளும்போது இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இப்படியாக சம்பவத்தன்றும், பணத்தை பங்கு பிரிப்பதற்காக இரகசிய காதலன் ஹவுஸ் பாண்டி, பாண்டீஸ்வரியை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த ஹவுஸ் பாண்டி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பாண்டீஸ்வரியை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளார். மேலும் அதனை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி சாலையோரம் வீசிச் சென்றுள்ளார்.

இதையடுத்து காவல்துறையினர் பாண்டீஸ்வரியின் இரகசிய காதலனான ஹவுஸ் பாண்டியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு 7 மணியளவில் காலமானார். 

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அதை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருந்தார். 48 வயதான வித்யாசாகர் முன்னதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டிருந்தார்.

பின்னர், மார்ச் 2022-ன் இறுதியில், அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டதாகத் தெரிகிறது. எனவே அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் படிப்படியாக அவரது உடல்நிலை மோசமடைந்தது.

இந்நிலையில் நேற்று (28.06.2022) மாலை வித்யாசாகர்சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


 சென்னை மாநகராட்சி மேயராக இளம்பெண் ப்ரியா இருந்துவருகிறார். அவர் மேயராக பதவியேற்று இன்றுடன் 150 நாட்கள் ஆகிறது

மேயர் பிரியா ராஜன்



 

செய்தியாளர்கள் தேவை

தமிழகம் முழுவதும் தாலுகா வாரியாக செய்தியாளர்கள் (தன்னார்வலர்கள்) தேவை.

தொடர்புக்கு Whatsapp-எண் 9176297028 -ல்

சுய விவரங்களை அனுப்பவும்