07/22/22

மாணவர்களின் கற்றல் திறன் மேம்பட அவர்களுள் ஒருவராக நாமும் மாற வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

மாணவர்களின் கற்றல் திறன் மேம்பட வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.மாணவர்கள் என்பதை விட குழந்தைகள், சிறுவர்கள் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.குழந்தைகளின் மனதை புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அவர்களுள் ஒருவராக நாமும் மாற வேண்டும்.

இராமநாதபுரம் மாவட்டம் இராஜசூரியமடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகளுடன் ஒருவராக அமர்ந்து அவர்களின் கற்றல் திறனையும், கற்பித்தல் முறையையும் பார்வையிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி






 கீழக்கரையில் மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் - அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் ஆர்.எஸ். இராஜகண்ணப்பன் ஆகியோர் வழங்கினர்.

இராமநாதபுரம் மாவட்டம்,கீழக்கரையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். இராஜகண்ணப்பன் ஆகியோர் மீனவர் நலத்துறை சார்பாக மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பித்தார்கள்.







 தன்னார்வலர்களுக்கான பயிற்சி பணிமனை துவக்க விழா

இராமநாதபுரம் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் - வளர்ச்சியில் முன்னுரிமை பெறும் மாவட்டங்களில் சிறப்பு திட்ட அடிப்படை எழுத்தறிவு சான்றிதழ் வழங்குதல் மற்றும் தன்னார்வலர்களுக்கான பயிற்சி பணிமனை துவக்க விழா நிகழ்வில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர் எஸ் ராஜ கண்ணப்பன் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,கே.நவாஸ்கனி.இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்.மாநில துணைத்தலைவர்- இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.ஆகியோர் உரையாற்றினார்கள்.





இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் இ.ஆ.ப., இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான காதர்பாட்சா, முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சே முருகேசன், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் இயக்கம் இயக்குனர் முனைவர் பெ குப்புசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ பாலமுத்து, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசைவீரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - திருச்சி

இலங்கை மக்களுக்கு 3 ஆம் கட்டமாக அத்தியாவசிய பொருட்கள் - அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று பார்வையிட்டார்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் உள்ள மக்களுக்கு, தமிழர்களிடம் இருந்து அன்புடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அரிசி, பால் பவுடர், மருத்துவ உபகரணங்கள் அனுப்பி வைப்பதாக அறிவித்தர், அதன் அடிப்படையில் 3 ஆம் கட்டமாக அத்தியாவசிய பொருட்கள் கப்பலில் ஏற்றப்படுவதை நேரில் சென்று பார்வையிட்டார் அமைச்சர் செஞ்சி மஸ்தான் 






உடன் : தூத்துக்குடி மாநகராட்சி மேயர், மறுவாழ்வு முகாம் துணை இயக்குனர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள்

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

 திருச்சி மாநகராட்சி சார்பில் மக்களை தேடி மாநகராட்சி குறைதீர் முகாம்



தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின்படி நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவுரையின்படி திருச்சி மாநகராட்சி சார்பில் மக்களை தேடி மாநகராட்சி குறை தீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் இறுதி புதன்கிழமை அன்று நடைபெற உள்ளது.

மக்களை தேடி மாநகராட்சி குறைதீர்க்கும் முகாம் வருகிற 27.07.2022 ஆம் தேதியன்று மண்டலம் எண் : 1 - ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது மண்டல அலுவலகத்தில் உட்பட்ட 13-வார்டு பகுதி பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக குறைதீர் முகாமில் கொடுத்து பயன்பெறலாம்.

ஆகஸ்ட் - 30ஆம் தேதி மண்டலம் எண் : 2 அரியமங்கலம் கூட அலுவலகத்திலும்,

செப்டம்பர் 28ஆம் தேதி மண்டலம் எண் : 3 - திருவரம்பூர் ஜெகநாதபுரம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வளாகத்திலும்,

அக்டோபர் - 26ஆம் தேதி மண்டலம் எண் : 4 - பொன்மலை கோட்ட அலுவலகத்திலும்,

நவம்பர் - 30ஆம் தேதி மண்டலம் எண் : 5 கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் மக்களை தேடி மாநகராட்சி குறைதீர்க்கும் முகாம் நடைபெற இருக்கிறது. 

எனவே அந்தந்த மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு பகுதி பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக எழுதி குறைதீர்க்கும் முகாமில் அளித்து பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். 


நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

நகராட்சி நிர்வாகத்துறையின் வளர்ச்சி திட்ட பணிகள் -  அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு








சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறையின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தின் இன்று  நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு கலந்து கொண்டார் . சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தின் போது, தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றி வரும் நமது முதலமைச்சரின் கரத்தை வலுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் துணை நிற்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் 

 இக்கூட்டத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், காந்தி, சட்டமன்ற உறுப்பினர் இரா.ராஜேந்திரன், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், ஆகியோருடன் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 


நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

2022-23 நிதியாண்டின் மாநிலத்தின் வருவாய் குறித்த ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.



நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

 கலவர கும்பலை கட்டுப்படுத்துவது குறித்து போலீசாருக்கு பயிற்சி


திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் இன்று 22.07.202209 காவல் அதிகாரிகள் மற்றும் 80 ஆளினர்களுடன்காவல்துறை தலைவர், மத்திய மண்டலம், திருச்சி, காவல்துறை துணை தலைவர், திருச்சி சரகம், திருச்சி,காவல் கண்காணி்ப்பாளர், திருச்சி மாவட்டம்,அவர்களின் உத்தரவுப்படி இன்றைய வாராந்திர கவாதில் மாவட்டத்தில் ஏற்படும் சட்டம் & ஒழுங்கு பிரச்சனையின் போது கலவர கூட்டத்தை கட்டுப்படுத்தவும், கலைக்கவும் 5 காவல் அதிகாரிகள் மற்றும் 51 காவல் ஆளினர்களை கொண்டு Mob Operation பயிற்சி அளிக்கப்பட்டது.   




முதலில் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, உடன்பாடு ஏற்படவில்லை என்றால் ஒலிபெருக்கியில் எச்சரிப்பது உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது.

அதன் பின்னர் கலவரம் ஏற்படும் சூழல் வந்தால், தண்ணீரை பீய்ச்சி அடித்து கலவரக்காரர்களை கலைப்பது குறித்தும், கற்கள், ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தினால், அதிலிருந்து போலீசார் தங்களை தற்காத்துக் கொள்வது எப்பது என்பது குறித்தும் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் நேரிடையாக கலந்து கொண்டார்.


நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி


காவல்துறை தலைவராக (நுண்ணறிவு) பொறுப்பேற்றுக்கொண்ட மரு.க.அ. செந்தில்வேலன், இ.கா.ப., அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.



நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

திரௌபதி முர்மு  -  இந்திய குடியரசுத் தலைவராக தேர்வு


 திரௌபதி முர்மு

ஜனநாயக முறைப்படி இந்திய நாட்டின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் திருமிகு. திரௌபதி முர்மு. நம் நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெறும் அவருக்கு 

ஐபிஜ.நியூஸ் சார்பாக  வாழ்த்துகள்

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி
சாலை விபத்தில் திருச்சி செய்தியாளர் பலி


R.நீலக்கண்ணன் விராலிமலை தினகரன் பகுதி நேர நிருபராக பணியாற்றி, திருச்சி மாவட்ட ஸ்டாஃப் நிருபராக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்தார். விராலிமலையில் இருந்து திருச்சிக்கு நாள்தோறும் பைக்கிலோ அல்லது காரிலோ பணிக்கு வந்து சென்று கொண்டிருந்தார்.

வழக்கம் போல் பணி முடிந்து நேற்று இரவு தனது பைக்கில் வீட்டுக்கு திரும்பியபோது, திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா மணிகண்டம் ஒன்றியம் அளுந்தூர் அருகே சரக்கு வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். 

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபத்தையும்,அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும் ஐபிஐ நியூஸ் நிர்வாகம் தெரிவித்துக் கொள்கிறது.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி