07/25/22

திருச்சியில் புதுமையான

கட்டிட தொழில் நுட்பத்துடன் கூடிய

பன்நோக்கு வசதி மையம்


திருச்சி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில்   ஒரு பகுதியாக புதுமையான கட்டிட தொழில் நுட்பத்துடன் கூடிய  பன்நோக்கு  வசதி மையம் அமையஉள்ளது.

இதில்  சில்லறை விற்பனை கடைகள்,புட் கோர்ட்,ஹோட்டல் அறைகள் போன்றவை இருக்கும். ஐந்து தளங்கள் கொண்ட இந்த கட்டிடங்கள் அனைத்து தளங்களும்  எஸ்கலேட்டர் வசதியோடு இணைக்கப்பட்டு இருக்கும்.


நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி



M.M.D.A.COLONY,ARUMBAKKAM,CHENNAI



ரூ. 323.03 கோடி செலவில் மிதிவண்டிகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்


சென்னை, நுங்கம்பாக்கம், மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2021-2022ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயின்ற 6,35,947 மாணவர்களுக்கு ரூ. 323.03 கோடி செலவில் மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக 10 மாணவர்களுக்கு மிதிவண்டிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.


நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி



M.M.D.A.COLONY,ARUMBAKKAM,CHENNAI



திருச்சி மாநகரில்

(நாளை(26.07.2022

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்


திருச்சி கே.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் நாளை (26.07.2022) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இம்மின் நிலையத்திலிருந்து மின்சார பெறும் ஐயப்பன் நகர், பழனி நகர், பாரதிநகர், மங்கம்மா சாலை, அந்தோணி பள்ளி, தேவராய நகர், போலீஸ் காலனி,

பராசக்தி நகர், ஈஸ்வரி நகர், சபரி மில் பிருந்தாவனம், அம்மன் நகர், ரங்கா நகர், சுந்தர் நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், சிம்கோ தொழிற்சாலை, இந்தியன் வங்கி காலனி, காஜாமலை காலனி, காஜாமியின் பள்ளி, கலெக்டர் பங்களா, காஜா நகர், ஜமால் முகமது கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில்

காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.


நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி


M.M.D.A.COLONY,ARUMBAKKAM,CHENNAI





புதை வடிகால் குழாய் உடைப்பு !

பெருக்கெடுத்து ஓடிய கழிவுநீர்!!

பொதுமக்கள் பீதி!!!

திருச்சி மாநகர பகுதிகளில் தற்போது கழிவுநீர் புதை வடிகால் அமைக்கும் பணி ஆங்காங்கே நடைபெற்று வருவதால் ஏற்கனவே மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனிடையே மன்னார்புரத்திலிருந்து காஜாமலை செல்லும் சாலையில் கழிவுநீர் புதை வடிகால் குழாய் அதிக அழுத்தத்தின் காரணமாக மிகுந்த சத்தத்துடன் உடைப்பு ஏற்பட்டதுடன், கழிவுநீர் ஆறு போல பெருக்கெடுத்து ஓடியது.

அவ்வாறு பெருக்கெடுத்த ஓடிய கழிவு நீர் காஜாமலை, டிவிஎஸ் நகர் மற்றும் காலி மனைகளுக்குள் சென்றது. அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து பின்னர் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக ஆறு போல ஓடிய கழிவுநீர் நின்றது. அதிக அழுத்தம் காரணமாக குழாய் வெடிப்பு ஏற்பட்டதால் சுமார் 100 அடி தூரத்திற்கு சாலைகள் பெயர்ந்து ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டது.

கழிவுநீர் சென்றதால் துர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையில் சொல்ல முடியாமல் அவதிஅடைந்துள்ளனர். நிலநடுக்கம் ஏற்பட்டது போல அங்கு பெரிய சத்தம் ஏற்பட்டு தண்ணீர் பீச்சி அடித்ததாக அதனை நேரில் பார்வையிட்ட பொதுமக்கள் தெரிவித்தனர், மாநகராட்சி நிர்வாகத்தினர் விரைந்து செயல்பட்டு இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.


நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி