07/28/22

திருச்சி, கேகே நகரில் மாலை நேர

உழவர் சந்தை துவக்கம்




விவசாயிகள் மற்றும் நுகர்வோர் நேரடியாக பயன் பெறுவதற்காக, மறைந்த முதல்வர் கலைஞர் அவர்களால் துவங்கப்பட்ட பொன்னான திட்டமானது உழவர்சந்தை, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அண்ணாநகர், கே.கே.நகர், முசிறி, துறையூர், திருவெறும்பூர்,இலால்குடி மற்றும் மணப்பாறை என மொத்தம் ஏழு உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவை அனைத்தும் காலை 5மணி முதல் பிற்பகல் 1மணி வரை செயல்பட்டு வருகிறது.

இந்த சந்தைக்கு வரும் விவசாயிகள் சரக்கு கட்டணம் ஏதும் இன்றி உழவர் சந்தைக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் மூலம் தங்களது விளைநிலங்களில் இருந்து விளைபொருட்களை இடைத்தரகர்கள் இன்றி, சில்லரை விலையை விட 15% குறைவாகவும், மொத்த விலையை விட 20% அதிகமாகவும் விற்று பயனடைந்து வருகின்றனர்.

மாவட்டத்தில் ஒரு உழவர் சந்தை மாலை நேரத்தில் இயங்கும் என்ற உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களின் நிதிநிலை அறிவிப்பை தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கேகே நகர் உழவர்சந்தையில் மாலை நேரத்திலும் மாலை 4மணி முதல் இரவு 8மணி வரை 28.07.2022 முதல் செயல்படுகிறது.

28.07.2022 அன்று மாலை நேர உழவர்சந்தையை கேகே நகரில் துணை இயக்குநர்(வேளாண் வணிகம்) திருச்சி அவர்கள் துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர்கள்,உதவி வேளாண்மை அலுவலர்கள், விவசாய ஆர்வலர்குழு உறுப்பினர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவன உறுப்பினர்கள், விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாலை சந்தையில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகளான பாரம்பரிய அரிசி வகைகள், மரசெக்கு எண்ணெய், சிறுதானிய பொருட்கள்,பயறு வகை,சுண்டல் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட காளான் பொருட்கள்,நாட்டு கோழி முட்டை ஆகியவை தரமானதாகவும் விலை மலிவாகவும் கிடைக்கும்.

எனவே மாலை நேர உழவர் சந்தைக்கு அனைவரும் வருகை புரிந்து பயன்பெற துணை இயக்குநர்(வேளாண் வணிகம்)திருச்சி கேட்டுக்கொண்டார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி



 புதிய நூலகத் திறப்பு விழா

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்

திறந்து வைத்தார்.


திருநெடுங்குளம் ஊராட்சி பகுதியில் ரோட்டரி கிளப் மற்றும் பிரம்மா திருச்சி ஸ்டார்ஸ் இணைந்து அமைக்கப்பட்ட நூலகத்தை 28/7/2022 இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் திறந்து வைத்தார்.
திறந்து வைத்து விட்டு பேசிய மாவட்ட ஆட்சியர் நூலகத்தை அமைத்த ரோட்டரி கிளப் உறுப்பினர் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இதுபோல் அனைத்து ஊராட்சிகளிலும் தாங்கள் செயல்படுத்திட கோரிக்கை தெரிவித்தார்.

மேலும் மாணவர்களை இந்த நூலகத்தை பயன்படுத்தி தங்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்று தெரிவித்தார்.இந் நூலகத்தில் அனைத்து அரசு தேர்விற்கான அனைத்து புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  கே என் சேகரன்,கே எஸ் எம்.கருணாநிதி,ஒன்றிய கவுன்சிலர் பழனியப்பன் திருவெறும்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்,வட்டார வளர்ச்சி துணை அலுவலர்,மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீநிதி சதீஷ்குமார் துணைத் தலைவர்,வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி





 சார்ஜாவில் கடும் மழை

வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது..






திருச்சி மாநகரில் நாளை (29.07.2022) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்


 திருச்சி எடமலைப்பட்டி புதூர் துணைமின் நிலையத்தில் நாளை (29.07.2022) பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால் டி.எஸ்.பி கேம்ப், கிராப்பட்டி காலனி, கிராபட்டி, அன்பு நகர், அருணாச்சல நகர், காந்தி நகர், பாரதி மின் நகர், சின்கோ காலனி, அரசு காலணி, ஸ்டேட் பேங்க் காலனி, கொல்லங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை (29.07.2022) காலை 9:45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் வருகிறது என்று தமிழ்நாடு மின் பகிர்மான மற்றும் உற்பத்திக் கழக கிழக்கு செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார். 


நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி