07/31/22

முஸ்லிம் யூத் லீக் நினைவேந்தல் யாத்திரை 

கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர்

பாத்திமா முஸப்பர் எம்.சி. பங்கேற்பு


கேரளா பானக்காட்டில் துவங்கிய மங்கடா தொகுதி முஸ்லிம் யூத் லீக் நினைவேந்தல் யாத்திரை சென்னையில் நிறைவு.
கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர்,பாத்திமா முஸப்பர் எம்.சி. பங்கேற்பு.


கேரள மாநிலம் மங்கடா சட்டமன்ற தொகுதி முஸ்லிம் யூத் லீக் பிரதிநிதிகள் சம்ரிதி யாத்திரா என்ற நினைவேந்தல் யாத்திரை ஜூலை 28ம் தேதி பானக்காட்டில் துவங்கியது. அங்கு மாநில தலைவர் சையது சாதிக் அலி சிகாப்தங்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்ததோடு, மறைந்த தலைவர்களின் நினைவிடங்களுக்கு சென்று பிரார்த்தித்தனர். மூத்த முன்னோடிகளை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.முஸ்லிம் யூத் லீக் பிரதிநிதிகளை முன்னாள் அமைச்சர் மஞ்சலம்குழி அலி வாழ்த்தி வலியனுப்பினார்.

யாத்திரை பிரதிநிதிகள் 30-07 -2022 அன்று சென்னை வந்து காயிதேமில்லத், சிராஜுல்மில்லத் ஆகியோர் நினைவிடங்களுக்கு சென்று பிரார்த்தித்தனர். தொடர்ந்து 

சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள மகளிரணி மண்டல ஒருங்கிணைப்பாளர் ஏ.எம்.ஜெய்தூண் வணிக கட்டிட அரங்கில் கலந்துரையாடல் நிகழ்ச்சி மங்கடா தொகுதி யூத் லீக் தலைவர் ரபி கலத்தூர் தலைமையில் நடைபெற்றது.செயலாளர் அனீஸ் வெல்லிலா வரவேற்றார்.அமீர் பதாரி யாத்திரை விளக்கவுரையாற்றினார்.







யூத் லீக் கேரள மாநிலக் குழு உறுப்பினர் குரிக்கல் முனீர், மாவட்ட செயலாளர் டி.பி. ஹாரிஸ், பொருளாளர் சிகாப் சோலாயில், துணைத்தலைவர்கள் ஜஹபர் அலி தெரம்மன், 

டி.சாகுல்ஹமீது,முஹம்மது அலி குன்னம்,நிசார் போங்க், அன்சர்  கொடிலங்காடி உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர்.இறையன்பன் குத்தூஸ் பாடிய "முனீருல் மில்லத்தும் முதல்வர் தளபதியும் நாட்டின் இரு கண்கள் " என்ற பாடல் சி.டி.வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், மகளிரணி தேசிய தலைவர் ஏ.எஸ். பாத்திமா முஸப்பர் எம்.சி.,ஆகியோர் சிறப்புரையாற்றினர்.


நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சதுரங்க நினைவுப் பரிசினை வழங்கினார்.


சென்னை,எழும்பூர்,இராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற குடியரசுத் தலைவரின் கொடி வழங்கும் விழாவில்,இந்திய குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சதுரங்க நினைவுப் பரிசினை வழங்கினார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

கல்லூரி அளவில் ஆட்கடத்தல் எதிர்ப்பு குழு தொடக்கம்



இன்று உலக ஆட்கடத்தல் எதிர்ப்பு தினம்-2022 முன்னிட்டு திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் உலக ஆட்கடத்தல், பெண்கள் குழந்தைகளுக்கான வன்முறையை தடுக்கும் பொருட்டு கல்லூரி அளவில் உலக ஆட்கடத்தல் எதிர்ப்பு குழு உருவாக்க தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில் சிறப்பு விருந்தினராக P.அஜீம் காவல் ஆய்வாளர், குழந்தை மற்றும் மனித கடத்தல், திருச்சி மாநகரம் கலந்து கொண்டு பேசுகையில்... தற்போது பெருகிவரும் புதிய தொழில் நுட்பம் மூலம் நடைபெறும் தவறுகள் அதில் நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றி விரிவாக பேசினார்.


பின்னர் இக்குழுவை வழிநடத்த மக்கள் மேம்பாட்டு வினையகம் (PDI) மற்றும் காவேரி மகளிர் கல்லுரி இருவருக்கும் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. முடிவில் ஆட்கடத்தல் பற்றிய குறும்படம் மூலம் மாணவர்களுக்கு விளக்கி காண்பிக்கபட்டது.