முஸ்லிம் யூத் லீக் நினைவேந்தல் யாத்திரை
கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர்
பாத்திமா முஸப்பர் எம்.சி. பங்கேற்பு
கேரள மாநிலம் மங்கடா சட்டமன்ற தொகுதி முஸ்லிம் யூத் லீக் பிரதிநிதிகள் சம்ரிதி யாத்திரா என்ற நினைவேந்தல் யாத்திரை ஜூலை 28ம் தேதி பானக்காட்டில் துவங்கியது. அங்கு மாநில தலைவர் சையது சாதிக் அலி சிகாப்தங்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்ததோடு, மறைந்த தலைவர்களின் நினைவிடங்களுக்கு சென்று பிரார்த்தித்தனர். மூத்த முன்னோடிகளை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.முஸ்லிம் யூத் லீக் பிரதிநிதிகளை முன்னாள் அமைச்சர் மஞ்சலம்குழி அலி வாழ்த்தி வலியனுப்பினார்.
யாத்திரை பிரதிநிதிகள் 30-07 -2022 அன்று சென்னை வந்து காயிதேமில்லத், சிராஜுல்மில்லத் ஆகியோர் நினைவிடங்களுக்கு சென்று பிரார்த்தித்தனர். தொடர்ந்து
சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள மகளிரணி மண்டல ஒருங்கிணைப்பாளர் ஏ.எம்.ஜெய்தூண் வணிக கட்டிட அரங்கில் கலந்துரையாடல் நிகழ்ச்சி மங்கடா தொகுதி யூத் லீக் தலைவர் ரபி கலத்தூர் தலைமையில் நடைபெற்றது.செயலாளர் அனீஸ் வெல்லிலா வரவேற்றார்.அமீர் பதாரி யாத்திரை விளக்கவுரையாற்றினார்.
Post A Comment:
0 comments so far,add yours