08/05/22

மணப்பாறை கலந்தாய்வு கூட்டம்

ப.அப்துல் சமது எம்.எல்.ஏ.,

தலைமையில் நடைபெற்றது




மணப்பாறை நகராட்சி பஜார் வீதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க காவல்துறை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர், போக்குவரத்து காவல் ஆய்வாளர், வணிகர்கள்,கனரக வாகன உரிமை யாளர்கள்,உள்ளிட்டவர்களுடன் கலந்தாய்வு கூட்டம் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் ப.அப்துல் சமது தலைமையில் நடைபெற்றது.

திருச்சி காவேரி பாலம் இன்று மூடப்படுகிறதா?- அதிகாரிகள் தகவல்


திருச்சி காவேரி பாலம் இன்று இரவு மூடப்படுகிறது.இருசக்கர வாகனகளுக்கு அனுமதி உண்டு

திருச்சி காவேரி பாலத்தில் ரூ.6.87 கோடி மதிப்பில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.

பராமரிப்பு பணிகள் நடைபெறும்போது வாகனப் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காவேரி பாலம் இன்று இரவு 12.00 (05.08.2022 ) முதல் மூடப்படுகிறது

பேருந்து போக்குவரத்துக்கு மாற்று வழியாக ஓயாமறி மின் இடுகாடு➡ கும்பகோணத்தான் சாலை➡சுங்கச்சாவடி என்: 6 வழியாக திருவானைக்கோவில் செல்லலாம்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது

திருச்சி காவேரி பாலம் மூடும் முடிவை தற்காலிகமாக ஒத்திவைப்பு - அதிகாரிகள் தகவல்!!

திருச்சி காவேரி பாலம் இன்று (5.8.22) முதல் பராமரிப்பு பணிக்காக மூடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது 

வெள்ளப்பெருக்கு காரணமாக தற்காலிகமாக காவேரி பாலம் மூடுவதை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது .

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

பாண்டமங்கலம் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ. 16,36,500 மதிப்புள்ள

ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்பு



திருச்சி  பாண்டமங்கலம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலுக்கு ரூ16,36500/- மதிப்புள்ள 272.75 ச.அடி இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகளை திருச்சி மண்டல இந்து சமய அறநிலையதுறை இணை ஆணையர் சீ.செல்வராஜ்  உத்திரவு படி திருச்சி, உதவி ஆணையர்  லெ.லட்சுமணன்  முன்னிலையில், செயல் அலுவலல் ரா.நித்தியா மேற்பார்வையில் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் ஆகியோர் ஒத்துழைப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

பேரிடர் மேலாண்மை மீட்புக் குழு ‌ தயார் - திருச்சி மாநகர காவல்துறை


திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், திருச்சி காவேரி மற்றும் கொள்ளிட ஆற்றில் வெள்ள அபாய தடுப்பு பணிகளை குறித்து ஆய்வு மேற்க்கொண்டும், காவல் துணை ஆணையர்கள், காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார்.

திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவேரி மற்றும் கொள்ளிட ஆற்றில் வெள்ளம் காரணமாக கரையோர மற்றும் தாழ்வான தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளை தொடர்ந்து கண்காணிப்பு செய்யவும், பொதுமக்களை வெள்ளப் பகுதியிலிருந்து உடனடியாக பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து வந்து தங்க வைப்பதற்கும் ஒரு காவல் ஆய்வாளர், 4 காவல் உதவி ஆய்வாளர் மற்றும் 80 காவலர்கள் கொண்ட"திருச்சி மாநகர காவல் பேரிடர் மேலாண்மை குழுவினர்களை” தக்க பாதுகாப்பு உபகரணங்களுடன் ஸ்ரீரங்கம் மற்றும் கோட்டை பகுதியில் தயாராக இருக்க வேண்டும் என்றும்,நீச்சல் தெரிந்த காவல் ஆளிநர்களுக்கு பாதுகாப்பு பணிக்கு நியமித்தும், பேரிடர் மீட்பு பணியில் ஈடுபடும் காவலர்கள் மிகவும் கவனமுடன் மீட்பு பணியில் ஈடுபடுமாறு திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் அறிவுறுத்தினார்.

மேலும் இவர்களுடன் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் தலைமையிடம் அவர்கள், காவல் உதவி ஆணையர் ஸ்ரீரங்கம் சரகம், காவல் உதவி ஆணையர் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு, காவல் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி