08/10/22

 திருச்சி மாநகராட்சி பகுதிகளில்

தொடர் கதையாகிவிட்ட

மின்கம்பங்கள் விழும் சம்பவம்



திருச்சி மாநகர பகுதிகளில் சாலையில் நடுவே சிமெண்ட் கட்டைகளை கட்டி அதன் நடுவே பூ செடிகளை வளர்த்து வைத்து அழகுப்படுத்துவதை மாநகராட்சி செய்து வந்தது.அதன் நடுவில் மின்கம்பங்களும் அமைக்கப்பட்டு இருந்தன.மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த மின் கம்பங்களுக்கு இடையே இணையதள வசதி, (தொலைக்காட்சி) பார்ப்பதற்கு தேவையான கேபிள்  ஒயர்களை கட்டி வைத்திருந்தனர்.


கடந்த இரண்டு மாதமாக முதலில்  கன மழை பெய்த பொழுது திருச்சி மாநகராட்சியின் அருகாமையில் மின்கம்பங்கள் இரவில் சாய்ந்தன. அதேபோல் மாநகராட்சிக்கு எதிராகவும் இருந்த மின்கம்பங்கள் சாய்ந்தது. இது தற்பொழுது மாநகராட்சி பகுதிகளில் தொடர் கதையாகி விட்டது .


இன்று (10.08.2022) திருச்சி - புதுக்கோட்டை சாலையில் கொட்டப்பட்டு பால்பண்ணை அருகே ஆறு மின்கம்பங்கள் முறிந்தே விழுந்து விட்டன. இந்த மின்கம்பங்களுக்கு இடையேயும் இணையதள, தொலைக்காட்சி கேபிளுக்கு ஒயர்கள் கட்டப்பட்டிருந்தது. தற்போது காற்று பலமாக வீசி வருவதால் இந்த மின் கம்பங்களுக்கு இடையே உள்ள ஒயர்களின் பாரம் அதிகமாக இருப்பதால் காற்று வேகமாக அடித்தவுடன் மின்கம்பங்களை சாய்ந்து முறிந்து விழவே செய்து விட்டது.

இதுவரை நடந்த மூன்று நிகழ்வுகளில் எந்த விதமான அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை.மாநகராட்சி உடனடியாக இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


இந்த சம்பவங்கள் நிகழ்ந்த சாலை முழுவதும் பிரதான சாலைகள் எப்பொழுதும் வாகன நெரிசல் அதிகமாக உள்ள பகுதி.இதனை கருத்தில் கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் இனி இதுபோன்ற சம்பவம் நிகழாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் உள்ளனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

 திருச்சி குட்ஷெட்டில் வேலைநிறுத்தம்

அத்தியாவசிய பொருட்கள்

டன் கணக்கில் தேக்கம்



திருச்சி ரெயில்வே குட் செட்டில் லாரிகள் பாதுகாப்பாக நிறுத்த இடவசதி செய்து தர வேண்டும், பார்க்கிங் இல்லாததால் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகளில் இருந்து பேட்டரிகள் மற்றும் உதிரி பாகங்கள் திருடப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே குட்செட் தலைமை கூட்ஸ் பொறுப்பாளர்கள் மற்றும் ரயில்வே முதுநிலை கமர்சியல் மேலாளர், மாவட்ட ஆட்சியர் அவர்கள் விரைந்து ரயில்வே நிர்வாகத்திடம் பேசி பார்க்கிங் வசதி ஏற்படுத்தி தரக்கோரி இன்றைய தினம் ரயில்வே சரக்கு வேகன்களில் வரும் உரம், கோதுமை மற்றும் மத்திய தொகுப்பிற்கு கொண்டு செல்லப்படும் சிமென்ட் மூட்டைகளை இறக்க மறுத்தும், சரக்கு லாரிகள் இயக்குவதை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதில் 450க்கும் மேற்பட்ட லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் குட்ஷெட்டில் லாரிகள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபடுவதாகவும், 1ம் தேதிக்குள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற ரயில்வே நிர்வாகம் முன்வராவிட்டால் ஒன்றாம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் குட் ஷெட் லாரி உரிமையாளர்கள் ஈடுபடுவோம் எனவும் ரயில்வே நிர்வாகத்திற்கு எச்சரிக்கை விடுத்தனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

போதைப் பொருள் தடுப்பு மு.க.ஸ்டாலின் ஆலோசனை



சென்னை,கலைவாணர் அரங்கத்தில் போதைப் பொருள் தடுப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

தகைசால் தமிழர் விருது நல்லகண்ணுவுக்கு IBI NEWS-ன் வாழ்த்துகள்



தமிழ்நாடு அரசின் இந்த ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது பெறவிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு-க்கு IBI NEWS சார்பாக வாழ்த்துகள்.

எளிமைக்கும், கொள்கைப் பிடிப்புக்கும் உதாரணமாகத் திகழும் அவருக்கு இந்த விருது மிகவும் பொருத்தமானது.

கலைஞரின் திருவுருவப் படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர்.



சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி நிறைவு விழாவில்,சிறுவர்,சிறுமியர்களால் Rubik's Cube-யால் வடிவமைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் கலைஞரின் திருவுருவப் படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

திருச்சி:கொள்ளையர்கள் 5 பேர் கைது

108 பவுன் தங்க நகைகள் பறிமுதல்



சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி பேரூராட்சி, பெரிய மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிச்சமுத்து மகன் கௌதம்பிரபு (வயது 27), பனமரத்துப்பட்டி தாலுகா,காந்தி நகர் 3வது தெருவை சேர்ந்த பூபதி மகன் ஹரிஹரன் (வயது 19), கொண்டாலம்பட்டி, அழகுநகரை சேர்ந்த சின்னத்தம்பி மகன் விஜயகுமார் (வயது 20), நாமக்கல் மாவட்டம், மாணிக்கம் பாளையம் தாலுக்கா, சேருகலை பகுதியை சேர்ந்த அப்புசாமி மகன் பாலமுருகன் (வயது 32) என்பதும், இவர்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

மேலும் அவர்கள் திருச்சி பிச்சாண்டார் கோவில் ரயில்நிலையம் அருகே இருக்கும் ஒரு வீட்டில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்ற தயார் நிலையில் இருந்தபோது போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது.

இதுகுறித்து 4 பேரின் மீது வழக்குப்பதிவு செய்த கொள்ளிடம் போலீசார் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து தனித்தனியாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்த கொள்ளை கும்பலை சேர்ந்த 5வது நபரான நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே காட்டூர் பகுதியை சேர்ந்த தங்கராஜ் மகன் கனகராஜ் (வயது 33) என்பவரையும் கைது செய்தனர்.

தொடர்ந்து 5 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் ஈரோடு, திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கொள்ளையடித்த சம்பவங்கள் குறித்து வாக்குமூலம் அளித்தனர்.

தகவலின் பேரில் அப்பகுதிகளுக்கு விரைந்த சென்ற தனிப்படை போலீசார் 108 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.இதனையடுத்து கௌதம்பிரபு, ஹரிஹரன், விஜயகுமார், பாலமுருகன் மற்றும் கனகராஜ் ஆகிய 5 பேரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

ஆஷுரா நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஹாஜி.பி.எம்.ஹுமாயூன் ஏற்பாடு






திருச்சி தெற்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக நடத்தப்படும் காயிதேமில்லத் பெண்கள் மதரசாவில் ஆஷுரா நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நேற்று (09.08.2022) ஏற்பாடு செய்யப்பட்டது.அதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு  நோன்பு திறந்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட பொருளாளர்  ஹாஜி.பி.எம்.ஹுமாயூன் செய்திருந்தார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி