08/21/22

கிருஷ்ண  ஜெயந்தியன்று

அவதரித்த காட்சிகள்








திருச்சியில்கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் கே என் நேரு தொடங்கி வைத்தார்






திருச்சிராப்பள்ளியில் உள்ள கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமினை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்

இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் செ.ஸ்டாலின் குமார், எம். பழனியாண்டி, ஆகியோருடன் திருச்சி மாவட்ட ஆட்சியர்  பிரதீப் குமார்,அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

திருச்சி பீமநகர் முஸ்லிம் சுன்னத் ஜமாத் சார்பில் இலவச மருத்துவ முகாம்





திருச்சி பீமநகர் முஸ்லிம் சுன்னத் ஜமாத் சார்பில் இலவச மருத்துவ முகாம் மற்றும் மருத்துவ காப்பீடு பதிவு செய்யும் முகாம்!.

திருச்சி பீமநகர் முஸ்லிம் சுன்னத் ஜமாத் துருப்பு பள்ளிவாசல் சார்பில் இலவச மருத்துவ முகாம் மற்றும் மருத்துவ காப்பீடு அட்டை பதிவு செய்யும் முகாம் தலைவர் ஹாஜி.அப்துல் ஜலீல் தலைமையில் பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் ஹபீபுர் ரஹ்மான் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்கள்.

இந்த மருத்துவ முகாமில் பள்ளியின் செயலாளர் ஹாஜி. அப்துல்லா பொருளாளர் ஹாஜி.உபயதுல்லா துணைத்தலைவர் ஹாஜி.பஷீர் அகமத் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் ஹாஜி.ராஜா முகமது, ஹாஜி. காஜா மைதீன், ஹாஜி.ஹபிபுல்லா, ஹாஜி.காஜாமைதீன், ஹாஜி.சலாவுதீன்,

தலைமை இமாம் மௌலானா.முஹம்மது பஸீம் தாவூதி, உலமாக்கள் மௌலானா.சிக்கந்தர் ஜைனி, மௌலானா.அன்வர்ஷா, மௌலானா முஹம்மது புகாரி, பேரா. மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர்.

மேலும் உங்கள் தோழன் அறக்கட்டளையின் நிறுவனர் அப்துல் ரஹீம் தலைமையில் நிர்வாகிகள் மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவம் மற்றும் அனைத்து வகையான மருத்துவ ஆலோசனைகள்,தமிழக அரசின் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு பதிவு செய்தல் ஆகியவை செய்யப்பட்டது.

 இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி

உறுப்பினர் சேர்க்கை
படிவம் ஒப்படைப்பு




இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மதுரை மாவட்ட உறுப்பினர் சேர்க்கை படிவங்களை மதுரை தெற்கு மாவட்ட தலைவர் ஹாஜி.P.K.N. அப்துல் காதர் ஆலிம் மற்றும் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் இக்பால் ஆகியோரிடம்,

மதுரை அவுதா.காதர் தலைமையில் தாஜுதீன்,இராமநாதபுரம் ஆசிக், ஹபீப் முஹம்மது, ஜமீல் முஹம்மது, மஹபூப் பாஷா, பழக்கடை காதர் பாய், ஷேக் முஹம்மது ஆகியோர் உறுப்பினர் சேர்க்கை படிவத்தையும், சேர்க்கை தொகையும் ஒப்படைத்தனர்.

சிறப்புநிருபர்- ஜே.இப்ராஹிம் - தூத்துக்குடி