09/22/22

மேயர் பிரியா ராஜன்

மு.க.ஸ்டாலினை

சந்தித்து வாழ்த்து


சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் உறுப்பினராக தேர்வு செய்யப் பட்டதற்காக இன்று தலைமை செயலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

நமதுநிருபர்- K.ஷாகுல் ஹமீது - திருச்சி

வன உயிரின வார விழா

ஆன்லைன் போட்டி


திருச்சி வனக்கோட்டம் சார்பில் வன உயிரின  வார விழா அக்டோபர் மாதம் மூன்றாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது.

இதை முன்னிட்டு பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கட்டுரை,பேச்சு மற்றும் ஓவிய போட்டிகள் ஆன்லைனில் நடக்கிறது முதல் கட்டமாக கட்டுரை போட்டி இனறு தொடங்குகிறது.

ஒன்பதாம் வகுப்பு முதல் +2 மாணவ மாணவிகள் வண்ணத்துப்பூச்சி மற்றும் அதன் முக்கியத்துவம் என்ற தலைப்பில்  கல்லூரி மாணவர்கள் "உயிரியல் பூங்கா மற்றும் பல்லுயிர் பெருக்க பாதுகாப்பு என்ற தலைப்பிலும் கட்டுரைகள் எழுதலாம்.

கட்டுரை எழுதும் தாளில் வலது ஓரத்தில் மாணவர் பெயர், செல்போன், பள்ளி பெயர் மாற்றுத்திறனாளி மாணவர்கள் அதற்கான அடையாள அட்டை ஆகியவற்றுடன் இன்று முதல் 24 ஆம் தேதி  மாலை 5. 40 வரை தங்களது பதிவுகளை foresttrichy@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கும், 9789967171என்ற whatsapp எண்ணிலும் பதிவு செய்யலாம்.

பேச்சுப் போட்டிக்கு எல்கேஜி முதல் வகுப்பு, இரண்டு முதல் ஐந்தாம் வகுப்பு ,ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவ மாணவிகள் மூன்று பிரிவுகளாக "வன உயிரினங்களை பாதுகாத்தலின் அவசியம் என்ற தலைப்பில்.

ஒன்பதாம் வகுப்பு முதல் 12 வரை, கல்லூரி மாணவர்கள் மாற்றுத்திறனாளிகள் எனும் மூன்று பிரிவுகளில் மனித/வன உயிர்  மோதல் மற்றும் கட்டுப்படுத்துதல்  நடவடிக்கைகள் என்ற தலைப்பில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஐந்து நிமிடங்களுக்குள் பேசி குறைந்தபட்சம் 20 எம்பி அளவுள்ள வீடியோவாக 24 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

இதே வரிசையில் மூன்று முதல் மூன்று பிரிவுகள் வன உயிரின பாதுகாப்பு என்ற தலைப்பிலும் இரண்டாவது மூன்றாவது பிரிவினர் காலநிலை மாற்றம் மற்றும் வன உயிரினம் என்ற தலைப்பிலும் ஓவியங்களில் வரைந்து ஜேபிஇஜி ஃபைலாக மாணவர் பெயர், வகுப்பு, பள்ளி, செல்போன்௭ண், மாணவர் அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்களுடன் இமெயில்,வாட்ஸப்பில் 24ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் 

இத்தகவலை மாவட்ட வன அலுவலர் கிரண் தெரிவித்துள்ளார்.

நமதுநிருபர்- K.ஷாகுல் ஹமீது - திருச்சி


நாளை 23.09.2022

மின்தடை அறிவிப்பு


மதுரை சுப்பிரமணியபுரம் மின் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் 23.09.2022 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 03.00 மணி வரை மாதாந்திரப் வேலைகள் நடைபெற இருப்பதால் மின்தடை (Total shut down) ஏற்படும் என்பதினை தெரிவித்துக் கொள்கிறோம்.மதுரை மின்சார வாரியம் அறிவிப்பு.

நமது நிருபர் - சென்னை ஷேக் அப்துல்லா


இரு சக்கர வாகனங்கள்

மோதல் மூவர் காயம்


கோட்டையிலிருந்து திருக்கோயிலூர் செல்லும் சாலையில் மூன்று பேர் சென்ற இரு சக்கர வாகனம் எறையூர் சாலையை கடைக்கும்போது மற்றொரு இரு சக்கர வாகனத்தில் மோதியது. இதில் மூவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

நமது நிருபர்R.வேல்முருகன் - கள்ளக்குறிச்சி

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத்

மாநில தலைவர் பீமநகர் S.ரபீக்

கண்டன அறிக்கை



ஜனநாயக சமூக சேவை அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) கொரோனா போன்ற பல பேரிடர் காலங்களில் தன்னலமற்ற அர்ப்பணிப்பு சேவை பணியை செய்து வந்த நிலையில் அந்த அமைப்பின் மீதான அத்துமீறிய சோதனை நடவடிக்கை களுக்கும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கைதுக்கும் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் (UTJ) கடும் கண்டனம்..

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற பெயரில், செய்திகளை வெளியிட்டு, சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஜனநாயக ரீதியாக செயல்படும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை முடக்க நினைக்கும் தேசிய புலனாய்வு (NIA)   நிறுவனத்திற்கும் மத்திய பாசிச பாஜக அரசுக்கும் வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

தற்போது இன்று கைது செய்யப்பட்டுள்ள PFI மாநில, தேசிய நிர்வாகிகளையும், தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகளையும் உடனடியாக நிபந்தனையின்றி  விடுதலை செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

இது போன்று தமிழகத்தில் தேசிய புலனாய்வு முகமையின் சட்டவிரோத மற்றும் அடக்குமுறை நடவடிக்கைகளை தமிழக முதல்வர்  அவர்கள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் தமிழக முஸ்லிம்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் பீமநகர் S.ரபீக் தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

கே.என்.ராமஜெயம்

திருவுருவ சிலைக்கு

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

மரியாதை


திருச்சி கேர் கல்லூரியில்  கழக முதன்மைச் செயலாளர்-நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேருவின் தம்பியும் மறைந்த தொழில் அதிபருமான கே.என்.ராமஜெயம் பிறந்தநாளை முன்னிட்டு அவரது  திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

திருச்சியில் வழிப்பறி செய்த

17 வயது சிறுவன் உட்பட 5 பேர் கைது

2 பேர் தலைமறைவு



திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை, இருங்களூர் கைகாட்டி, திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை, சமயபுரம் சந்தை கேட் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் வரும் நபர்களிடம் இருசக்கர வாகனம், செல்போன், நகை, பணம் உள்ளிட்டவைகளை ஒரு கும்பல் வழிப்பறி செய்து வந்தனர்.

இச்சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். போலீசாருக்கு சவால் விடுக்கும் வகையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க தொடர் விசாரணையில் போலீசார் இறங்கினர். மேலும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். 

இந்நிலையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட சமயபுரம் காவல்காரன் தெருவை சேர்ந்த செல்வகுமார் மகன் 21 வயதான சூரிய பிரகாஷ், சமயபுரம் செல்லாண்டி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த முருகேசன் மகன் 20 வயதான யோகேந்திரன், சமயபுரம் சேனியர் கள்ளிக்குடியைச் சேர்ந்த சுந்தரம் மகன் 24 வயதான தர்மராஜ், சமயபுரம் சந்தை கேட் சோலைநகரை சேர்ந்த சுப்ரமணி மகன் 21 வயதான ஷியாம் சுந்தர் மற்றும் 17 வயதான சிறுவன் ஆகியோர் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் வழிப்பறி செய்ததை ஒப்புக்கொண்டனர்.

அவர்களிடம் இருந்து 5 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.இதில் சமயபுரம் பகுதியைச் சேர்ந்த ஜம்பு ஹரிஷ் ஆகியோர் தலைமறைவாயினர். பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த சமயபுரம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி

திருச்சி மாவட்டத்தில்

இன்று (22.09.2022) காய்ச்சல் முகாம்

நடைபெறும் இடங்கள்



தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இன்புளுயன் காய்ச்சல் பரவி வருகிறது. மழைக்காலங்களில் பரவும் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. காய்ச்சலை கட்டுப்படுத்தும் முயற்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கும் தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்தில் நேற்று முதல் காய்ச்சல் முகாம்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று (22.09.2022) திருச்சி மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகிறது.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் – திருச்சி