09/25/22

இந்திய அரசியலமைப்பு

பாதுகாப்பு நடைப்பயணம்





பிரதமர் மோடி ஆட்சியை கண்டித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் மதநல்லிணக்க நல்லாட்சி அமைய இந்திய அரசியலமைப்பு பாதுகாப்பு நடைப்பயணம் இன்று 25 9 2022 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தொடங்கி 75 கி.மீ. தூரத்தை மூன்று நாட்களில் ஸ்ரீபெரும்புதூர் பாரத ரத்னா ராஜிவ்காந்தி நினைவிடம் சென்று இந்த நடைபயணம்  பேரணி முடிவடையும்

 நடைபயணத்தை தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமரி அனந்தன், தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் K S அழகிரி ஆகியோர் தொடங்கி வைத்தனர்

மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சிவ ராஜசேகரன் M C சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி பகுதி தலைவர் தணிகாசலம் 63 வது வட்ட தலைவர் S நயிப்கான் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் பெரும் திரளாக பேரணியில்  கலந்து கொண்டனர்.

தகவல் - S.A.N.K.S.நகீப்கான் - துணை ஆசிரியர் - IBI NEWS

அமைப்புசாரா தொழில்

நிறுவனங்களின்

பொருளாதார நிலை

நாடு தழுவிய ஆய்வு

மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் களப்பணிகள் கோட்டத்தில் அமைப்புசாரா தொழில் நிறுவனங்களின் பொருளாதார நிலை பற்றிய நாடு தழுவிய ஆய்வு

மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய புள்ளியியல் அலுவராகத்தின் களப்பணிகள் கோட்டத்தில் அமைப்புசாரா தொழில் நிறுவனங்களின் பொருளாதார நிலை பற்றிய நாடு தழுவிய ஆய்வு குறித்து களப்பணியாளர் களுக்கான வட்டார பயிற்சி கருத்தரங்கம் வரும் 26.09.2022 முதல் 28.09.2022 வரை நுங்கம்பாக்கம் ("ஹாரிசன்ஸ் ஹோட்டலில்") நடைபெற இருக்கிறது.

வரும் 26.09.2022 அன்று முனைவர் P.T. சுபா துணை தலைமை இயக்குநர் துவக்கி வைக்கிறார். பயிற்சி அரங்கத்தின் வகுப்புகள் சென்னை அலுவராகத்தின் துணை இயக்குனர் செல்வி. அமேலியா பெட்சி  துணையுடன் மூத்த புள்ளியியல் அலுவலர்கள் மூலம் நடத்தப்பெறும். 

இந்திய பொருளாதாரத்தில் அமைப்புசாரா தொழில் நிறுவனங்களின் பங்கு முதன்மையானது. காரணம், உள்நாட்டு மொத்த உற்பத்தி வளர்ச்சிக்கு அதன் பங்கு அதிகமாக இருப்பதுடன் அந்நிறுவனங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் மூலம் பலதரப்பட்ட மக்களின் வேலைவாய்ப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதும் ஆகும்.

எனவே இந்நிறுவனங்களின் தற்போதைய பொருளாதார நிலைமை அதன் வளர்ச்சிக்கான தேவைகள் பற்றிய விவரங்கள் இத்தகைய ஆய்வின் மூலம் திரட்டப்படுகின்றன.  விவசாயம் கட்டுமானம் அல்லாத மற்ற அமைப்புசாரா நிறுவனங்களின் (உற்பத்தி, வணிகம் மற்றும் இதர சேவைகள் பிரிவு உள்ளிட்டவை இதில் அடங்கும்) 

தற்போதைய நிலை குறித்து ஆய்வு ஆண்டுதோறும் மேற்கொள்ளப்பட இருக்கிறது. தேசிய புள்ளியியல் அலுவலகங்கள் மூலம் நாடு முழுவதும் அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை ஒருவருட காலத்திற்கு கிராம மற்றும் நகர்புறங்களில் நடத்தப்பெறும்.

நமது செய்தியாளர் G.மோனிஷாசென்னை

 ஹாஃப் மாரத்தான் போட்டி

அனுராக் தாக்கூர் பாராட்டு





இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற ஹாஃப் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பாராட்டினார்

மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இன்று (2022, செப்டம்பர் 25) இமாச்சலப் பிரதேசத்தில் நடைபெற்ற ஹாஃப் மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பாராட்டு தெரிவித்தார்.

இமாச்சலப் பிரதேச ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மத்திய குடிமைப் பணிகள் கலாச்சார மற்றும் விளையாட்டு வாரியம், இந்தியா அரசின் தனிநபர் மற்றும் பயிற்சித் துறை மற்றும் இந்திய இளைஞர் விடுதிகள் சங்கம் ஆகியவற்றால் ஹாஃப் மராத்தான் நடத்தப்பட்டது.

நமது செய்தியாளர் G.மோனிஷாசென்னை

செப்டம்பர் 26 முதல் 28 வரை

குடியரசுத் தலைவர்

கர்நாடகா பயணம்

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, நாளை (செப்டம்பர் 26) முதல் 28ந்தேதி  வரை கர்நாடக மாநிலத்துக்கு பயணம் மேற்கொள்கிறார். குடியரசு தலைவர் பதவியேற்ற பின்னர் ஒரு மாநிலத்துக்கு அவர் பயணம் செய்வது இதுவே முதல் முறையாகும்.

மைசூர் சாமுண்டி மலையில் தசரா விழாவை நாளை குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்கிறார்.அதே நாளில், ஹூபாலியில் ஹூப்ளி-தார்வாட் மாகராட்சி  ஏற்பாடு செய்துள்ள ‘பவுர சன்மனா’ என்ற விழாவில் கலந்து கொள்கிறார். தார்வாடில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் புதிய வளாகத்தையும் அவர் திறந்து வைக்கிறார்.

செப்டம்பர் 27, 2022 அன்று, பெங்களூருவில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின்  ஒருங்கிணைந்த கிரையோஜெனிக் என்ஜின்கள் உற்பத்தி வசதியை குடியரசுத் தலைவர் திறந்து வைக்கிறார்.

அவர் தென் மண்டல நச்சு நுண்மவியல் (வைராலஜி) நிறுவனத்திற்கு காணொலி மூலம் அடிக்கல் நாட்டுவார். அதே நாளில், செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தின் தொடக்க விழாவில் குடியரசுத் தலைவர் கலந்துகொள்வார்;

மேலும் பெங்களூருவில் அவரைக் கவுரவித்து  கர்நாடக அரசு வழங்கும் வரவேற்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வார். 28ந்தேதி குடியரசுத் தலைவர் புது தில்லி திரும்புவார்

நமது செய்தியாளர் G.மோனிஷாசென்னை