10/01/22

மு.க.ஸ்டாலினுக்கு

கேரள அமைச்சர்கள் வரவேற்பு



இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கேரள அமைச்சர்கள் கே.ராஜன், ஜி.ஆர்.அணில் ஆகியோர் வரவேற்றனர்.

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி

சிவாஜி கணேசன்

திருவுருவச் சிலைக்கு

மு.க.ஸ்டாலின் மரியாதை






 "நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் அவர்களது குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க, மணிமண்டபத்துக்குள் இருந்து வெளியே வைக்கப்பட்ட அவரது திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.

நடிப்புக் கலைக்கு என்றும் இலக்கணமாகத் திகழுபவர் நடிகர் திலகம்!

பேரறிஞர் அண்ணா எழுதிய நாடகத்தில் நடித்து, தந்தை பெரியாரால் ’சிவாஜி’ என்ற பட்டம் பெற்று, அந்தப் பெயரிலேயே வரலாற்றில் நிலைத்துள்ளவர்.

பராசக்தி ஹீரோவாக புரட்சிக் கனல் கக்கி, வரலாற்று நாயகர்களின் திரை வடிவமாக நம் மனதில் பதிந்துள்ள நடிகர் திலகம் முத்தமிழறிஞர் கலைஞரின் உயிரனைய நண்பர்.

1952-இல் வெளியான அவரது முதல் திரைப்படமான பராசக்திக்கு இது 70-ஆம் ஆண்டு.

முத்தமிழறிஞர் கலைஞரின் கூர்மிகு தமிழும் நடிகர் திலகத்தின் நடிப்பும் தமிழ்த் திரையுலகின் திருப்புமுனைகள்!

கலை உள்ள வரை செவாலியே சிவாஜி கணேசன் புகழ் இந்த மன்ணில் நிலைத்து நிற்கும்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி

டாஸ்மாக் கடைகள் மூட

ஆட்சியர் உத்தரவு




திருச்சி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

வருகிற 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டும், 9ம் தேதி மிலாடி நபியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் அனைத்து வகையான மதுபான கடைகளை மூட திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இந்த மதுபான கடைகளுடன் இயங்கும் பார்களும், மதுபான சில்லறை விற்பனை கூடங்களும், பெரிய ஓட்டல்களில் செயல்படும் பார்களும் மூடி இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அன்றைய தினங்களில் மதுபானங்களை விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும். மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி

பணி நியமன ஆணை

கே.என்.நேரு வழங்கினார்









தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபம் கழகத்தில் காலியாக உள்ள எழுத்தர் பணி, காவலர் பணி, உதவியாளர் பணிகளை நிரப்ப விண்ணப்பங்கள் முறையாக வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், அப்பணிகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான நபர்களுக்கு பணி நியமன ஆணையை  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு வழங்கினார்.அனைவரும் சிறந்த முறையில் பணியாற்ற வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது, துறை சார்ந்த அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

நமதுநிருபர் - M.முஹம்மது நியாஸ் – திருச்சி