திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க செயலாளர் சிவானந்தன்.

தமிழகம் முழுவதும் 3000க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகிறது. வருடத்திற்கு ஒரு கோடி டன் நெல்லை அரைத்து அரிசியாக தயாரித்து வருகின்றோம்.மத்திய அரசு உடனடியாக அரிசி மீதான 5%ஜிஎஸ்டி வரியை நீக்காவிட்டால்  அடுத்த கட்டமாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை நோக்கி செல்லும் என சிவானந்தன் தெரிவித்துள்ளார்.

வரி விதிப்பால்  கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய் அரிசி விலை உயர வாய்ப்புள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் உப்புக்கு வரி விதித்ததை போல் தற்போது மத்திய அரசு அரிசிக்கு வரி உயர்வை கொண்டு வந்துள்ளது.

மற்ற வரிகள் அனைத்தும் பொதுமக்கள் தலையில்தான் விழும் என தெரிவித்தார். இதனை எதிர்த்து வருகின்ற 16ஆம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு நடுத்தர மக்கள் ஏழையாக மாறிவிட்டனர் என புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது. அரிசிக்கும், கோதுமைக்கும் ஐந்து சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரி விதித்திருப்பது நடுத்தர மக்களுக்கு மேலும் ஒரு சுமையை அதிகரிக்கும் நிலையை மத்திய அரசு உருவாக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டனர்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours