தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், காவிரிப் பாலத்தின் மேல் பகுதியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதை முன்னிட்டு போக்குவரத்தை மாற்றி அமைத்தல் தொடர்பாக திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு பேசுகையில்..,
பழைய காவிரி பாலத்தினை சரி செய்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு தமிழக முதல்வர் ரூ6.50 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளார். அதன்படி பாலம் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தால் 40 வருடங்களுக்கு இந்த பாலம் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார்.
புதிய பாலம் 13 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ள நிலையில் அதுவரை பழைய பாலத்தினை சரி செய்து பயன்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணிகளானது பழைய காவேரி பாலத்தின் அடிப்பகுதியில் முழுமையாக முடிக்கப்பட்டு அதன் மேற்பகுதியில் பணிகள் நடைபெற உள்ளது இந்த பணிகள் 8 மாதத்திற்குள் முடியும் என கூறினார்
காவிரி பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் பொழுது கனரக வாகனங்கள் ஆறு மாதத்திற்கு அதில் செல்ல முடியாது. அது குறித்து ஆய்வு செய்து முறையான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை ஆணையர் வெளியிடுவார்கள் என குறிப்பிட்டார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி
Post A Comment:
0 comments so far,add yours