சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சத்யாகிரக அமர்வு - சு.திருநாவுக்கரசர்,கே.வி.தங்கபாலு பங்கேற்பு
இன்று 26.07.2022 செவ்வாய்கிழமை காலை 11.00 மணியளவில் மோடியின் ஆட்சியை கண்டித்தும்.விலைவாசி ஏற்றம்,அநியாய வரிவிதிப்பு,வேலையில்லா திண்டாட்டம்,சோனியா காந்தி மீது அமலாக்கத்துறை மூலமாக பொய்வழக்கு புனைந்து சம்மன் அனுப்பிய நடவடிக்கையை கண்டித்தும்,காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் கைதை கண்டித்தும் துறைமுகம் தொகுதி செவன் வெல்ஸ் நாட்டுப்பிள்ளையார் கோவில் தெருவில் அமைந்துள்ள காந்தியடிகளின் சிலை அருகே சத்யாகிரக அமர்வு நடைபெற்றது
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநில தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர் MP, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில தலைவர் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.வி.தங்கபாலு EX.MP, சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் -மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சிவ ராஜசேகரன் M.A.B.L., MC, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி தலைவர் தீரன் T.M.தணிகாசலம் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பகுதி தலைவர்கள் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
S.A.N.K.நகீப்கான் - துணை ஆசிரியர்-IBI NEWS
Post A Comment:
0 comments so far,add yours