தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி பேச்சுப் போட்டி வரும் ஜூலை 28 ஆம் தேதி நடத்தப்படுகிறது - ராமநாதபுரம் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை அறிவிப்பு
தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி ராமநாதபுரம் மாவட்ட அனைத்துப் பள்ளி மாணவ, மாணவியருக்கு மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி வரும் ஜூலை 28 ஆம் தேதி நடத்தப்படுகிறது.
ராமநாதபுரம் வெளிப்பட்டிணம் பகுதியில் உள்ள செய்யதம்மாள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இப்போட்டி நடத்தப்படுகிறது. போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் மாணவா்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், 3 ஆம் பரிசு ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றுகளும் வழங்கப்படவுள்ளன.
போட்டியில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் இருவா் தோவு செய்யப்பட்டு சிறப்பு பரிசாக தலா ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும்.இதில் அனைத்து பள்ளிகளையும் சோந்த 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.
மேலும் விவரங்களுக்குமாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளா்ச்சித் துறையை நேரிலோ அல்லது 9952289798 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்
நமதுநிருபர்- M.ஜமால் முஹம்மது - சென்னை
Post A Comment:
0 comments so far,add yours