அமர் சேவா சங்கத்தின் 40வது ஆண்டு விழா - சேவையை பாராட்டி கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் வாழ்த்து
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தொகுதியிலுள்ள ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தின் நிர்வாக அலுவலக கட்டிடம் மறைந்த தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமது சாகிப் நினைவாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி மேனாள் உறுப்பினருமான கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் முயற்சியில் கட்டிக் கொடுக்கப்பட்டு தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது, தலைவர் பேராசிரியர் அவர்கள் தனது பங்களிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கியுள்ளார்.
அமர் சேவா சங்கத்தின் 40வது ஆண்டு விழாவில் அதன் நிறுவன தலைவர் எஸ்.ராமகிருஸ்ணன், கவுரவ செயலாளர் எஸ்.சங்கர ராமன் ஆகியோரின் தன்னலமற்ற சேவையை பாராட்டி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் சால்வை அணிவித்து கவுரவித்து வாழ்த்துப் பெற்றார்.
நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி
M.M.D.A.COLONY,ARUMBAKKAM,CHENNAI |
Post A Comment:
0 comments so far,add yours