பெருநர சென்னை மாநகராட்சி,44-வது செஸ் ஒலிம்பியாட் மாரத்தான் ஓட்டம் அமைச்சர்கள்,சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்
தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆலோசனைபடி, பெருநர சென்னை மாநகராட்சி, 44-வது செஸ் ஒலிம்பியாட் மாரத்தான் ஓட்டம் இன்று (24-07-2022) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மா.சுப்பிரமணியன், இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாடு, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்,சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் ஆகியோர் கொடியசைத்து துவக்கிவைத்து மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றனர்.
நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்லூரி மாணவர்கள்,இளைஞர்கள் மற்றும் பலர் உற்சாகமாக கலந்து கொண்டார்கள்.
Post A Comment:
0 comments so far,add yours