கமுதி அருகே அரசுப் பள்ளிகளுக்கு ரூ.80 ஆயிரம் மதிப்பில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை கிராம மக்கள் வழங்கினர்
கமுதி அருகே அரசுப் பள்ளிகளுக்கு சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை கிராம மக்கள் வழங்கினர்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 320 மாணவ, மாணவிகளும், ஊரின் மையப் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 80 மாணவ, மாணவிகளும் படித்து வருகின்றனர்.
இப்பள்ளிகளுக்கு கிராம மக்கள் சார்பில் ரூ.80 ஆயிரம் மதிப்பில் நுழைவுவாயில், வகுப்பறைகள், விளையாட்டு மைதானம், உள்ளிட்ட பகுதிகளில் 12 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன.
மாணவர்களையும், பள்ளிக்குள் வந்து செல்லும் நபர்களையும் கண்காணிக்க கிராம மக்கள் கேமராக்களை வழங்கியதாக ராமசாமிபட்டி பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் அழகர், முன்னாள் தலைவர் சுரேஷ் ஆகியோர் தெரிவித்தனர்.
நமதுநிருபர்- M.ஜமால் முஹம்மது - சென்னை
Post A Comment:
0 comments so far,add yours