இராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பாக ஒருங்கிணைக்கப்பட்ட சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்களுடன் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் கே நவாஸ்கனி பங்கேற்று உரையாற்றினார்
இந்நிகழ்வில் நெடுஞ்சாலைகள் துறை அரசு முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ்,ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை.,இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. மாவட்ட பொறுப்பாளருமான காதர்பாட்சா,முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சே.முருகேசன் மற்றும் அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் அனைத்து துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி
Post A Comment:
0 comments so far,add yours