இன்று 14-07 - 2022 மதியம் 1.30 மணியளவில் புது கோட்டை மாவட்டம் கைனாங்கரை மாத்தூர் பகுதியில் பாவா பள்ளிவாசல் & மதரஸா (முஸ்லிம் சுன்னத் ஜமாஅத்) நிர்வாகிகள் கூட்டம் திருச்சி மாவட்ட  வஃக்பு வாரிய அதிகாரிகள் முன்னிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  தேசிய தலைவர்  பேராசிரியர் K.M.காதர் மொகிதீன் M.A.Ex.M.P அவர்களின் தலைமையில் நடைபெற்றது.




பாவா பள்ளி இமாம் அவர்கள் கிராஅத் ஓதி  கூட்டத்தை துவங்கி வைத்தார். மேற்கு தொகுதி அமைப்பாளர் K.M.S.அப்துல் கபூர் வரவேற்புரை நிகழ்த்தினார். திருச்சி மாவட்ட  செயலாளர் K.M.K.ஹபிபுர் ரஹ்மான் கருத்துரை வழங்கினார்.


மேலும் திருச்சி மாவட்ட துணைத் தலைவர்  S.A.H உமர் பாரூக் ஹஜ்ரத் அவர்கள் சிறப்புரை வழங்கினார்.வஃக்பு வாரிய கண்காணிப்பாளர் ஷெரீப் அஹமது மற்றும் வஃக்பு வாரிய ஆய்வாளர் ஜெயினுலாபுதீன் ஆகியோர் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தனர்.

பள்ளியின் முத்தவல்லியாக பேராசிரியர் K.M.காதர் மொகிதீன் அவர்களும், தலைவர் K.M.B.அப்துல் ஜலீல்,துணைத் தலைவர்களாக K.M.B.முகம்மது இக்பால், K.M.B.முகம்மது இப்ராகிம்,


செயலாளர் K.M.K.ஹபீபுர் ரஹ்மான், துணை செயலாளர்களாக மெளலான முகம்மது மீரான் மிஸ்பாஹி ஹஜ்ரத் மற்றும் K.M.B.ரியாஸ் அகமது, பொருளாளராக  B.M.ஹீமாயூன் ,

செயற்குழு உறுப்பினர்களாக K.M.S அப்துல் கதர், A.M.H.அன்சர் அலி,G.H சையத் முஹம்மது ஹக்கிம். A.பையாஸ் அகமது, A.இஜாஸ் அகமது, A. நஃபிஸ் அகமது, I .தெளஃபிக் அகமது, M. அப்துல் ரசீது, முஃப்தி S.A.H.ஆர் பாரூக் மழாஹிரி,M. உபைதுல்லா, N.ஜாகீர் உசேன், முகம்மது தெளசிப், அஷ்ரப் அலி, முஹம்மது ஹாலித் ஆகியோரும்,

சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் M.K ஜாகிர் உசேன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் பலர் நிகழ்வில் கலந்துகொண்டனர்


நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours