சென்னை தலைமை செயலகத்தில் மேற்கு ஆஸ்திரேலிய கல்வித்துறை அமைச்சர் டெம்பில்மன் அவர்களும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களும் சந்தித்து கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினார்கள்
கல்வி முன்னேற்றத்திற்காக இருவரும் இணைந்து செயல்படுவது குறித்தும், மேற்கு ஆஸ்திரேலியாவின் இந்திய அலுவலகத்தை சென்னையில் தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நஷித் சவுத்ரி (வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஆணையர், மேற்கு ஆஸ்திரேலியா அரசு),சாமுவேல் மியர்ஸ், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா இ.ஆ.ப., ஆகியோரும் கலந்துகொண்டார்கள்.
நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி
Post A Comment:
0 comments so far,add yours