மதுரையில் தி லெஜென்ட் திரைப்படத்திற்கு நூறு மாற்றுத்திறனளிகளை அழைத்துச்சென்ற தனியார் உணவு பொருள் நிறுவனம்.

பிரபல தொழிலதிபரும்,சரவணா ஸ்டோர் உரிமையாளருமான சரவணா அருள் தமிழ் சினிமாவில் ‘தி லெஜெண்ட்’ என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகி நடித்து உள்ளார்.


பலகோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவான இந்த திரைப்படத்தை‌ பிரபல இயக்குனர்‌ ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்தியா திரைப்படமாக இந்த படம் இன்று வெளியாகி பல்வேறு வரவேற்புகளையும் விமர்சனங்களையும் பெற்று உள்ளது. 


தமிழகம் முழுவதும் 800 திரையரங்குகளிலும், உலகம் முழுவதும் 2500க்கும் மேற்பட்ட திரையரங்கில் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் மதுரையை சேர்ந்த தனியார் உணவுப்பொருள் நிறுவனம் ஒன்று 100 மாற்றுத்திறனாளிகளை சரவணா அருள் நடித்து வெளியான தி லெஜண்ட் திரைப்படத்திற்கு அழைத்துச்சென்றுள்ளனர்.


மதுரை ஆரப்பாளையம் குரு திரையரங்கில் மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையிலும்,தன்னம்பிக்கை தரும் வகையிலும் இத்திரைப்படத்தை பார்வையிட ஏற்பாடு செய்ததாக அந்நிறுவனத்தினர் தெரிவித்தனர்


நமது நிருபர். சென்னை ஷேக் அப்துல்லா

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours