கிராமங்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து நாட்டுக்கு சேவையாற்றும் மாணவர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் துவங்கப்பட்ட திருப்பூர் மாவட்டம் அமராவதி நகரில் அமைந்துள்ள சைனிக் இராணுவ பள்ளி வைர விழாவில் கலந்து கொண்டார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
1969'ம் ஆண்டில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களும், 2010'ம் ஆண்டில் மாண்புமிகு முதல்வர் அவர்களும் இப்பள்ளிக்கு வருகை தந்து புதிய கட்டிடங்களை திறந்து வைத்துள்ளார்கள்.
தற்போது மாண்புமிகு முதல்வர் அவர்களால் அளிக்கப்பட்ட வாழ்த்து செய்தியினை கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட அரங்கத்தில் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
சைனிக் பள்ளியின் சிறப்பு அஞ்சல் தலைகளை வெளியிட்டு, புதிய ஊழியர் குடியிருப்புகளையும் திறந்து வைத்ததில் மிக்க மகிழ்ச்சி என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு பள்ளியின் முதல்வர் கேப்டன் நிர்மல் ரகு அவர்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.
நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி
Post A Comment:
0 comments so far,add yours