புளியங்கடை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பழுது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று ஆய்வு
சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதிகுட்பட்ட புளியங்கடை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பழுதடைந்துள்ளதாக இன்று (30/07/2022) காலை பத்திரிகைகளில் செய்தி வந்தது. செய்தியை படித்த உடனே புளியங்கடை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. பள்ளியை பார்வையிட்டு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக ஊர் மக்களிடம் உறுதி அளித்தார்.
மேலும்,ஏற்காடு தொகுதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்.சித்ரா அவர்களை தொடர்புகொண்டு பள்ளி சீரமைப்பு பற்றி விவாதித்தார்,மாவட்ட ஆட்சியர் அவர்களிடமும் ‘புதிய கட்டிடம் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கையை உடனே செய்யுமாறும், துறை ரீதியான உதவிகளை செய்வதற்கு காத்திருப்பதாகவும்’ உறுதியளித்தார்
முதல்வர் அவர்களின் வழியில்,ஆரோக்கியமான விமர்சனங்களுக்கும், நியாயமான கோரிக்கைகளுக்கும் எப்போதும் முன்னுரிமை கொடுப்போம்! அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல! பெருமையின் அடையாளம் என்பதை நிரூபிப்போம்.
இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.
நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி
Post A Comment:
0 comments so far,add yours