சிங்கார சென்னை
உணவு பாதுகாப்பு திருவிழா 2022
துர்கா ஸ்டாலின் மா.சுப்பிரமணியன்
கலந்து கொண்டனர்
சிங்கார சென்னை உணவு பாதுகாப்பு திருவிழா 2022 என்ற பெயரில் மாபெரும் நிகழ்ச்சி சென்னை தீவுத்திடலில் நேற்று 13/08/2022 சனிக்கிழமை நடைபெற்றது. தமிழர்களின் பாரம்பரிய உணவு மற்றும் உணவு சம்பந்தப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளில் உணவு பொருட்கள் விற்பனைக்காகவும் காட்சிக்காக வும் வைக்கப்பட்டு இருந்தது,
இந்த நிகழ்ச்சியை சிறப்பிக்கும் வகையில் பரதநாட்டியம், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கள் சிலம்பம் மற்றும் மேளதாளம் மதுரை முத்து அவர்கள் தலைமையில் பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த உணவு பாதுகாப்பு திருவிழாவில் தமிழக முதல்வரின் துணைவியார் துர்கா ஸ்டாலின் மற்றும் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours