திருச்சி மாநகரில் நாளை (24.08.2022)
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்
திருச்சி நகரியம் கோட்டம் கன்டோன்மென்ட் பிரிவுக்குட்பட்ட SBI காலனி, ராயல் பாரடைஸ், அலமேலு மங்கை பிளாக், ஈஸ்ட் கேட் அப்பார்ட்மெண்ட், பத்மாவதி பிளாக், வின் பாரடைஸ் அப்பார்ட்மெண்ட்ஸ், ஜெயம் பாரடைஸ், கேசவ எமலார்டு அப்பார்ட்மெண்ட் மற்றும் ராகவேந்திரா ப்ளாக் ஆகிய பகுதிகளில் புதிய (AB Switch) காற்று திறப்பான் அமைக்கும் பணிகள் மேற்கொள்ள உள்ளது.
இதனால் நாளை (24.08.2022) காலை 10 மணி முதல் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours