75 ஆவது சுதந்திர திருநாள்
அமுதப் பெருவிழா
தேசியக்கொடி மாணவர் அணிவகுப்பு ஊர்வலம்.
75 ஆவது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழா தேசியக்கொடி மாணவர் அணிவகுப்பு ஊர்வலம் கே.எல்.என் பாலி டெக்னிக் கல்லூரி,கே.எல்.என் வித்யாலயா (சிபிஎஸ்இ) பள்ளி,கே.எல்.என் கல்வியியல் கல்லூரி சார்பில் இந்திய திருநாட்டின் 75 ஆவது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா மற்றும் அனைத்து வீடுகளில் தேசியக்கொடி பரப்புரை செய்யும் நோக்கத்தில் இன்று(12.08.2022) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கல்லூரி வளாகத்தில் இருந்து புறப்பட்டு மதுரை கோழிமேடு,விரகனூர்,தெப்பக்குளம் சுற்றுப்பகுதிகளில் மாணவர்கள்,ஆசிரியர்கள்,அலுவலர்கள் தேசியக்கொடி ஏந்தி கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
இந்த அணிவகுப்பு தெப்பக்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் முன்னிலையில்,கல்லூரி செயலாளர் டி.ஆ.ர்.கே.பி.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.கல்லூரி முதல்வர் பி.வி.என்.ஆனந்தன்,துணை முதல்வர் கே.பி.சகாதேவன்,கே.எல்.என்.வித்யாலயா (சிபிஎஸ்இ)பள்ளி முதல்வர் ஜே.வேனி,துணைத் தலைவர்கள்,நிர்வாக அதிகாரி எஸ்,கே,ராஜ பிரபு,மேலாளர் டி.வி.லட்சுமணன்,ஆசிரியர் பெருமக்கள் மற்றும் 300 மாணவ,மாணவிகள் இந்த தேசியக்கொடி அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.
இந்த அணிவகுப்பு ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் டாக்டர் கே.சகாதேவன்,நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சிவக்குமார் மற்றும் அனைத்து அலுவலர்கள்,பணியாளர்கள் இணைந்து மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
அணி வகுப்பின் போது தேசியக் கொடியின் மாண்பினை பற்றியும்,இந்திய திருநாட்டின் வலிமைகளை பற்றியும் எடுத்துக் கூறி மக்களிடையே ஆகஸ்ட் 11 முதல் ஆகஸ்ட் 17 வரை ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி ஏற்றும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு மக்களிடையே பரப்புரை செய்யப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours