அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற
போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி
தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க அனைத்து பள்ளிகளிலும் படிக்கின்ற மாணவர்களிடையே போதை பொருள் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்க அறிவுறுத்தப்பட்டது.அதன் அடிப்படையில் கோ புதூர் அல் அமீன் மேல்நிலைப் பள்ளியில் போதை விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்வு நேற்று நடைபெற்றது
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சேக் நபி தலைமை தாங்கினார். புதூர் சட்டம் ஒழுங்கு காவல் சார்பு ஆய்வாளர் ராஜகோபால்,போக்குவரத்து சார்பு ஆய்வாளர் அய்யனார்,போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளர் அழகர்சாமி மற்றும் ஆசிரியர் பயிற்றுனர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் பயன்படுத்துவதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினர்.
மேலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் போதை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர் விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours