பெண்களுக்கான மரியாதை
விழிப்புணர்வு நிகழ்ச்சி
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தொடங்கி வைத்தார்
பெண்களுக்கான மரியாதை என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி சத்திரம் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் கலந்துகொண்டு இந்நிகழ்சியை தொடங்கி வைத்தனர்
பெண் கல்வி, உயரிய வளர்ச்சி,பாதுகாப்பு, ஆரோக்கியம், குடும்பம் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கு சமுதாயத்தில் மரியாதை பற்றிய விழிப்புணர்வு போன்றவற்றை முக்கிய அம்சமாக கொண்டு இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
இந்த நிகழ்ச்சியில்,துணை மேயர்.திவ்யா,மலைக்கோட்டை பகுதி கழகச் செயலாளரும் மண்டல குழு தலைவருமான மு.மதிவாணன்,பகுதி கழகச் செயலாளர் மருந்து கடை மோகன், வட்டக் கழக செயலாளர்கள் சிவகுமார்,சங்கர்,நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்,மற்றும் கழக நிர்வாகிகள் கழகத் தோழர்கள் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours