இளையான்குடி இளைஞர்களுக்கான
இலவச கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பு
தொடக்க விழா
இளையான்குடி முஸ்லிம் இளைஞர் ஐக்கிய கழக கட்டிடத்தில் நடைபெறும் ஹாஜி Dr.S.E.சேக் அப்துல் காதர் நினைவு கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் இளைஞர்களுக்கான இலவச கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்பின் தொடக்க விழா 17.08.2022 அன்று மாலை நடந்தது.
தமிழன் பவுண்டேஷன் டிரஸ்ட் இந்த பயிற்சி வகுப்பிற்கான செலவுகளை ஏற்று நிதியுதவி செய்தது. தமிழன் பவுண்டேஷன் டிரஸ்டின் டிரஸ்டி A. நஜிப் ஹவுத் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார்.இந்த பயிற்சி வகுப்பில் 12 கல்லூரி மாணவர்களும்.8 பள்ளி மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.
மேலப்பள்ளிவாசல் மானேஜிங் டிரஸ்டி ஹாஜி A.M. காதர்மீரா,டைம் டிரஸ்டின் மானேஜிங் டிரஸ்டி ஹாஜி T.S.H.முசாபர் அப்துல் ரஹ்மான் முன்னிலை வகித்தனர்.
தமிழன் பவுண்டேஷன் டிரஸ்டின் மானேஜிங் டிரஸ்டி A.அஜ்மல்கான் ஹவுத் வாழ்த்துரை வழங்கினார்.மேலப்பள்ளிவாசல் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஜமாத் உறுப்பினர்கள் இந்நிகழ்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தமிழன் பவுண்டேஷன் டிரஸ்டின் பொருளாளர் M.அரபாத் ஹவுத்,B.B.A. ஐக்கிய கழக நூலகக் கட்டிடத்தில் CCTV கேமரா பொருத்துவதற்கு ஏற்படும் செலவுகளை ஏற்றுக் கொள்வதற்கு சம்மதம் தெரிவித்தார்.அதற்காக ஜனாப் M. அரபாத் ஹவுத்-க்கு ஜமாத்தார்கள் மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours