நெல்லை கண்ணன் காலமானார்

ஐபிஐ நியூஸ் இரங்கல்


 சற்றுமுன்:திருநெல்வேலி டவுன் அம்மன் சன்னதி தெரு இல்லத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நெல்லை கண்ணன் காலமானார். IBI NEWS சார்பாக ஆழ்ந்த இரங்கல்.

சிறந்த பேச்சாளரும் பட்டிமன்ற நடுவருமான தமிழறிஞர் நெல்லை கண்ணன் (77) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.காங்கிரஸ் கட்சியில் காமராஜர் உடன் பயணித்த அவரை மக்கள் அனைவரும் அன்போடு 'தமிழ் கடல்' என அழைத்தனர்.

1970 ஆம் ஆண்டு முதல் பல்வேறு மேடைகளில் அவரின் தமிழ் ஒழித்து வந்தது.குன்றக்குடி அடிகளார் உடன் இணைந்து பட்டிமன்றங்களை அறிவார்ந்த விவாத தளங்களாக மாற்றியவர்.

அவரது ஆன்மா இறைவனின் திருவடியில் சாந்தி பெற ஐபிஐ நியூஸ் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

தகவல் = S.A.N.K.S.நகீப்கான் - துணை ஆசிரியர்-IBI NEWS

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours