வசந்த குமாருக்கு நினைவு அஞ்சலி சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது
நேற்று 28/8/22 மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த குமாரின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமரி அனந்தன் Ex.MP. மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சிவ ராஜசேகரன் MC, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி பகுதி தலைவர் T.M. தணிகாசலம், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் முகமது வாசிப் உசேன், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி பகுதி 63 வது வட்ட தலைவர் S.நயிப்கான், சிந்தாரிப்பேட்டை பகுதி தலைவர் சீனிவாசன் M.A.B.L., மற்றும் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த குமாருக்கு நேற்று பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours