ஆசைக்கு இணங்க மறுத்த
பெண்ணை கொலை செய்த நபர்
குண்டர் சட்டத்தில் கைது
கடந்த 11.07.22-ந்தேதி ஸ்ரீரங்கம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கொள்ளிடம் ஆற்றின் நடுவே உள்ள மணல்திட்டு புதரில் சுமார் 35 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் சந்ததேகம்படும்படியாக இறந்து கிடப்பதாக வெள்ளி திருமுத்தம் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்படி ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேற்படி சம்பவ தொடர்பாக புலன்விசாரணையில்,சம்பவ இடத்தில் சந்தேகம்படும்படியாக இறந்தது திருச்சி மாவட்டம் முதுவத்தூர் கிராமத்தை சேர்ந்த கலைசெல்வி (எ) செல்வி வயது 37 க.பெ.ராஜேந்திரன் என்பது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் மேற்படி இறந்து போன பெண் ஆயுதங்களால் தாக்கப்பட்டு இறந்துள்ளதால் சட்டப்பிரிவு 174 CRPC இருந்து சட்டப்பிரிவு 302 IPC வழக்காக மாற்றம் செய்து விசாரணை மேற்க்கொண்டதில், வழக்கில் இறந்துபோன கலைசெல்வி தனது ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொலை செய்ததாக திருச்சி மாவட்டம், கள்ளகுடியை சேர்ந்த நாகராஜ் என்பவர் கைது செய்ய்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப் பட்டார்.
மேலும் விசாரணையில் எதிரி நாகராஜ் என்பவர் குற்றச்செயல்புரியும் எண்ணம் கொண்டவர் எனவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர் என விசாரணையில் தெரிய வருவதால், எதிரியின் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு ஸ்ரீரங்கம் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் G.கார்த்திகேயன், மேற்படி எதிரி நாகராஜை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.
அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள எதிரி நாகராஜ் மீது குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்தும், சிறையில் அடைக்கப்பட்டார்.
Post A Comment:
0 comments so far,add yours