முக்கொம்பில் நீர் வரத்து அதிகரிப்பு
மாவட்ட ஆட்சியரகத்தில் ஆலோசனை
முக்கொம்பில் நீர் வரத்து அதிகரிப்பு- பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் ஆலோசனை
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், முக்கொம்பு காவிரியில் நீர்வரத்து அதிகரித்து , காவிரி மற்றும் கொள்ளிடத்தில் நீர் வெளியேற்றம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் டாக்டர்.க.மணிவாசன், இன்று ( 31.8.22) ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் இரா. அபிராமி, நீர் வளத்துறை செயற்பொறியாளர்கள் ஆர்.தமிழ்செல்வன், ஏ. நித்தியானந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours