ரூ.7 லட்சம் மதிப்புள்ள
குட்கா பறிமுதல்
திருச்சி மாநகரம் உறையூர் காவல் நிலைய எல்லையில் நேற்று இளைய தலைமுறையினரை சீரழிக்கும் வகையில் தடை செய்யப்பட்ட பொருட்களான ஹான்ஸ்,ஷைனி, விமல்,கணேஷ், கூலிப்,ஆர்.எம்.டி.பவுடர் போன்ற குட்கா பொருட்களை விற்பனை செய்வதாக காவல் ஆய்வாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
ரகசிய தகவலின் பெயரில் காமாட்சியம்மன் கோயில் பகுதியில் ஒருவருக்கு சொந்தமான இடத்தை சோதனை செய்தனர்.
அங்கு சந்தேகம் படும்படியாக நின்று கொண்டிருந்த உறையூர் காவல்காரர் தெருவை சேர்ந்த கோபி மற்றும் தென்னூர் சின்னசாமி நகரை சேர்ந்த செந்தில் ஆகியவரை பிடித்து விசாரணை செய்தபோது அவர்களிடமிருந்து 7 லட்சம் மதிப்புள்ள சுமார் 483 கிலோ 600 கிராம் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனைக்காக வைத்திருந்ததை பறிமுதல் செய்தும் விற்பனைக்கு பயன்படுத்திய ஒரு நான்கு சக்கரம் மற்றும் இரண்டு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தும் மேற்படியின் நபர்களை கைது செய்தும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்
Post A Comment:
0 comments so far,add yours