1,570 மாணவ,மாணவிகளுக்கு
விலையில்லா மிதிவண்டி
கே.என்.நேரு வழங்கினார்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 9 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 1,570 மாணவ, மாணவிகளுக்கு ரூ.80 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன்,சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள், ஆசிரியப் பெருமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours