முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காந்தி சிலை முன்பு போராட்டம்
நாட்டில் முஸ்லிம் சிறுபான்மையினரை தொடர்ந்து வேட்டையாடும் பாசிச அரசுகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக காந்தி சிலை முன்பு முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர்களான ET. முஹம்மது பஷீர், K. நவாஸ் கனி , அப்துல் ஸமத் ஸமதானி, அப்துல்வகாப் ஆகியோர் இன்று காந்தி சிலை முன்பு போராட்டம் செய்தனர்
இந்திய சிறுபான்மையினரின் உயிர்கள் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்கவும்,
புல்டோசர்களுக்கு எதிராக முன்மாதிரியான தண்டனையை அமுல்படுத்தவும்,
சிறுபான்மையினருக்கு தீங்கு விளைவிப்பதற்காக குறிப்பாகப் பயன்படுத்தப்படும் கரி சட்டங்களை ரத்து செய்யவும்,
கல்வித் துறையில் காவிமயமாக்கலை நிறுத்தவும்,வழிபாட்டு உரிமைச் சட்டம்,1991 ஐ நிலைநிறுத்தவும் மற்றும் அதற்கு எதிரான அத்துமீறல்களைத் தடுக்கவும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது
ஒவ்வொரு சந்தர்பத்திலும் முஸ்லிம் சிறுபான்மையினரை தொடர்ந்து வேட்டையாடும் இன்றைய அரசாங்கங்களின் பாசிச சார்பு போக்குகளுக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காந்தி சிலை முன் போராட்டம் நடத்தினர்.
Post A Comment:
0 comments so far,add yours