காவிரியில் ஆடிப்பெருக்கை மாலையில் மகிழ்ச்சியாக பொதுமக்கள் கொண்டாட சிறப்பு நடவடிக்கை
திருச்சி மாநகர காவல் ஆணையர் பேட்டி
திருச்சி அம்மா மண்டபம் படித்தறையில் ஆடி பெருக்கு விழாவை முன்னிட்டு கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் காவல் அதிகாரிகளுடன் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் ஆய்வில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி கரையோரங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக கொண்டாட 650த்திற்க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குற்ற நடவடிக்கைகளை தடுக்க பொதுமக்களோடு கலந்து சீருடை அணியாமல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவிரியில் 30 ஆயிரம் கன அடி நீர் வந்தாலும் ஆடி 18 ஆடிப்பெருக்கை பொதுமக்கள் கொண்டாடுவதற்கு அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் மாநகர காவல் துறையினர் செய்து உள்ளதாக குறிப்பிட்டடார்.
Post A Comment:
0 comments so far,add yours