அமைச்சர்கள் க.பொன்முடி
செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோருடன் கே.எம்.காதர் மொகிதீன் சந்திப்பு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் செப்டம்பர் 2ம்தேதி சென்னையில் நடைபெறவுள்ள அனைத்து சமய தலைவர்களும் பங்கேற்கும் 'தேச-நேச திருப்பயணம்' சந்திப்பு- கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் சார்பில் பங்கேற்கும் உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோரை இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், மாநில துணைத்தலைவர் கே. நவாஸ் கனி எம்.பி. ஆகியோர் நேற்று (22.08.2022) சந்தித்து கலந்துரையாடினர். மணிச்சுடர் ஊடகவியாளர் சாகுல்ஹமீது, ஏ.கே.முஹம்மது ரபி உள்ளிட்டோர் உடனிருந்தனர்
Post A Comment:
0 comments so far,add yours