திருச்சி விமான நிலையத்தில்

நடிகர் விக்ரம் ரசிகர்கள் மீது சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் தடியடி - விரட்டியடிப்பு






திரைப்பட நடிகர் விக்ரம் மற்றும் கேஜிஎஃப் படத்தின் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், முன்னணி நடிகர்கள் நடிக்கும் கோப்ரா திரைப்படம் வருகிற 31ம் தேதி திரையில் வெளியிடப்பட உள்ளது.இதனையொட்டி படக்குழுவினர் திருச்சி மற்றும் மதுரையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரசிகர்களையும் கல்லூரி மாணவர்களையும் சந்தித்து உரையாட உள்ளனர்.

இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை திருச்சி வந்த நடிகர் விக்ரம் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது அவரை காண ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்தனர், பயணிகள் உள்ளே செல்லும் பாதைக்கு ரசிகர்கள் ஓடி வந்தனர்.அவருக்கு மாலை மட்டும் சால்வை அணிவிக்க முற்பட்டனர். விமானநிலைய வருகை இடத்திலேயே நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் அவர்களை மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் தடியடி, மிதித்து விரட்டி அடித்தனர்.

தொடர்ந்து கூடியிருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்களை பார்த்து நடிகர் விக்ரம் கையசைத்தும், முத்தமிட்டபடியும் தனது வாழ்த்துக்களையும், அன்பையும் பரிமாறினார். தொடர்ந்து ரசிகர்கள் கூட்டத்தின் மத்தியில் பவுன்சர்களுடன் நடந்து சென்றபடி காரில் ஏறி விரைந்து சென்றார்.

இன்று காலை 10.30 மணியளவில் புனித வளனார் கல்லூரியில் மாணவர்களை சந்தித்து உரையாட உள்ளார். அதனை தொடர்ந்து மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - .திருச்சி

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours