அரசினர் தொழிற்பயிற்சி நிலைய புதிய கட்டடங்களை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

அமைச்சர்கள் குத்து விளக்கேற்றி வைத்து பார்வையிட்டனர்




தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில், அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் ரூ. 29.75 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் மதுரை அரசு தொழில் பயிற்சி நிலையம் ( மகளிர்) விடுதி கட்டிடத்தை திறந்து வைக்கப்பட்ட பின் மதுரை மாவட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்,நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி வைத்து பார்வையிட்டனர்.மாவட்ட ஆட்சித்தலைவர்,மதுரை மாநகராட்சி மேயர்,சோழவந்தான்,மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.


நமது நிருபர். சென்னை ஷேக் அப்துல்லா

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours