சைதை தொகுதி மடுவின்கரை பகுதியில் உந்துசக்தி நிலையம்
அமைச்சர் கே.என்.நேரு
தொடங்கி வைத்தார்
தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஆலோசனைப்படி,இன்று சைதை தொகுதி மடுவின்கரை பகுதியில் ரூபாய் 3.27 கோடி மதிப்பீட்டில் புதிய கழிவு நீர் உந்து சக்தி நிலையம், 1.70 கிலோமீட்டர் கழிவுநீர் குழாய் பதிக்கும் பணியும் மற்றும் 4.8கோடிமதிப்பீட்டில் வேளச்சேரி ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உந்துசக்தி நிலையம் பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வின்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,மற்றும் சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் உட்பட ,அரசு உயர் அலுவர்லர்கள், கழக நிர்வாகிகள்,மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours