பள்ளிகளில் வாசிப்பு இயக்கம்' திட்டம்

அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தொடங்கி வைத்தார்


திருச்சியில் உள்ள சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில், 'பள்ளிகளில் வாசிப்பு இயக்கம்' என்ற திட்டத்தை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று துவங்கி வைத்தார்.



இத்திட்டத்தின்படி, ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள மாணவர்கள் 6-8, 9-10, 11-12 என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படவேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் நூலகத்தில் உள்ள நூல்களிலிருந்து வாரம் ஒன்று வழங்கப்படவேண்டும். அவர்கள் அதை வீட்டுக்கும் எடுத்துக்கொண்டு போகலாம். அதை வாசித்து முடித்தவுடன் நூலகத்தில் திருப்பித் தந்துவிட்டு அடுத்த நூலை எடுத்துக்கொள்ளலாம். படித்த நூல் குறித்து விமர்சனம் எழுதலாம். அதை வைத்து ஓவியம் வரையலாம். நாடகம் நடத்தலாம். கலந்துரையாடல் செய்யலாம்.



திருச்சிராப்பள்ளி அரசு சையது முர்துஷா மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான நூலக செயலியினை அறிமுகம் செய்து பேசிய போது...

புத்தக வாசிப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டும்.மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக புத்தகம் படிக்கலாம் வெளிநாடு பறக்கலாம் என்று அறிவித்துள்ளோம்.

 எழுத்தாளர்களுடன் கலந்துரையாடுவதற்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். அரசு கொண்டுவரும் திட்டங்களை நல்ல விதத்தில் பயன்படுத்த வேண்டும்.மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குவது புத்தகங்கள் மட்டுமே என்றார்.

நமதுநிருபர்- M.முஹம்மது நியாஸ் - திருச்சி

Share To:

IBINEWS

Post A Comment:

0 comments so far,add yours