பரமக்குடி:போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
அமைச்சர் ஆர் எஸ் ராஜ கண்ணப்பன்
நவாஸ்கனி எம்பி பங்கேற்பு
தமிழக முதலமைச்சர்-ன் அறிவுறுத்தலின்படி போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நிகழ்வில் பரமக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர் எஸ் ராஜ கண்ணப்பனால் நேற்று தொடங்கி வைக்கப்பட்ட பேரணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை தலைவரும், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே நவாஸ்கனி எம்பி பங்கேற்றார்.
இந்நிகழ்வில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் IAS, இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரை IPS, பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours